காவிரி வரைவு திட்ட அறிக்கை: உச்சநீதிமன்றத்தில் மேலும் அவகாசம் கோரிய மத்திய அரசு

காவிரி விவகாரத்தில் வரைவு திட்ட அறிக்கையை தாக்கல் செய்ய, உச்சநீதிமன்றத்தில் மேலும் 10 நாட்கள் கால அவகாசத்தை மத்திய அரசு கோரியுள்ளது.

காவிரி விவகாரத்தில் வரைவு திட்ட அறிக்கையை தாக்கல் செய்ய, உச்சநீதிமன்றத்தில் மேலும் 10 நாட்கள் கால அவகாசத்தை மத்திய அரசு கோரியுள்ளது.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கில், 6 வார காலத்திற்குள் உரிய செயல்திட்டத்தை (ஸ்கீம்) வகுத்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்குமாறு கடந்த பிப்ரவரி 16-ம் தேதி மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்தாத மத்திய அரசு, ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு மேல்முறையீடு செய்தது. பின்னர் அன்று மாலையே மத்திய அரசு மனுவை திரும்பப் பெற்றது.

இந்நிலையில், உச்சநீதிமன்றம் வழங்கி இருந்த காலஅவகாசம் இன்றுடன் முடியும் நிலையில், மீண்டும் வழக்கு விசாரணை நடந்தது. அப்போது ஆஜராகி பதிலளித்த மத்திய அரசு, காவிரி வாரிய வரைவு திட்ட அறிக்கையை தாக்கல் செய்யவில்லை. அதற்கு பதிலாக, காவிரி வாரிய வரைவு திட்ட அறிக்கை தயாராக உள்ளது. அறிக்கை தயாரிப்பு பணிகள் இறுதிக் கட்டத்தில் உள்ளதால் அதனை தாக்கல் செய்ய மேலும் 10 நாட்கள் அவகாசம் வேண்டும் எனக் கேட்டுள்ளது. பிரதமர் மற்றும் துறை சார்ந்த அமைச்சர்களிடம் ஒப்புதல் பெற 10 நாட்கள் அவகாசம் தேவைப்படுகிறது. பிரதமர் மற்றும் அமைச்சர்கள் தற்போது கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் உள்ளதால், அவர்கள் ஒப்புதல் பெறுவதற்காகவே காலஅவகாசம் தேவை எனக் கேட்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி 6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசு மீது தமிழக அரசு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் இன்று விசாரணைக்கு வர உள்ளது. இந்நிலையில், வரைவு அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசு மேலும் அவகாசம் கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 45.8 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 32.95 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 8ஆம் தேதி நிலவரப்படி 45.8 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: தொடர் நீர் வெளியேற்றம்

கோவை மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. ஆழி...

வால்பாறையில் தொடர் மழை: பள்ளி மாணவர்கள், எஸ்டேட் தொழிலாளர்கள் கடும் அவதி

வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை இன்று காலையிலும் நீடித்ததால், பள்ளி மாணவர்கள...

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...