ஆட்டோ சங்க மாநில மாநாடு கோவையில் நாளை தொடக்கம்

கோவை: கோவையில் சி.ஐ.டி.யு., ஆட்டோ சங்க மாநில மாநாடு நாளை தொடங்க உள்ளது.

கோவை: கோவையில் சி.ஐ.டி.யு., ஆட்டோ சங்க மாநில மாநாடு நாளை தொடங்க உள்ளது.

சி.ஐ.டி.யு., தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனத்தின் 8-வது மாநில நாளை தொடங்கி வரும் 13-ம் தேதி வரை மூன்று நாட்கள் கோவையில் நடைபெறுகிறது. 11-ம் தேதி மாநிலம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான ஆட்டோ தொழிலாளர்கள் பங்கேற்கும் காக்கிச்சட்டை பேரணி நடைபெறுகிறது.

வடகோவை சிந்தாமணி முன்புறம் தொடங்கும் இந்த பேரணி பல்வேறு முக்கிய வீதிகள் வழியாகச் சென்று ராஜ வீதி தேர்நிலைத் திடலில் சங்கமிக்க இருக்கிறது. அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் சி.ஐ.டி.யு., மாநில தலைவர் அ.சவுந்திராராசன் உள்ளிட்ட தலைவர்கள் சிறப்புரையாற்ற உள்ளனர். இதனையடுத்து, மே 12, 13 ஆகிய இரண்டு நாட்கள் பிரதிநிதிகள் மாநாடு, மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள லாரி உரிமையாளர்கள் சங்க திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.

இந்த மாநாட்டில், மாநிலம் முழுவதும் உள்ள ஆட்டோ சங்க பிரதிநிதிகள் பங்கேற்று விவாதிக்க உள்ளனர். இதனைத்தொடர்ந்து பல்வேறு முக்கிய தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட உள்ளது. கோவையில் நடைபெறும் இம்மாநாட்டை வெற்றிகரமாக்கிட ஆட்டோ தொழிலாளர்கள் பெரும் உற்சாகமாய் இப்பணியை முன்னெடுத்து வருகின்றனர்.

Newsletter

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...