நகைச்சுவை நடிகர் நீலு உடல்நலக்குறைவால் காலமானார்

நூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நகைச்சுவை நடிகர் நீலு உடல்நலக்குறைவால் காலமானார்.

நூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நகைச்சுவை நடிகர் நீலு உடல்நலக்குறைவால் காலமானார்.

1936-ம் ஆண்டு பிறந்த நீலுவின் இயற்பெயர் நீலகண்டன் என்பதாகும். சிறு வயதில் இருந்தே நடிப்பில் ஆர்வம் காட்டிய இவர், பள்ளியில் பயிலும் போதே நாடகங்களில் நடித்து வந்தார். 1969-ம் ஆண்டு ஆயிரம் பொய் என்ற படத்தின் மூலம் நீலு தனது சினிமா வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர், நூற்றுக்கு நூறு, கவுரவம், வேலும் மயிலும் துணை, முகமது பின் துக்ளக், அம்மா பொண்ணு, அவ்வை சண்முகி, வெற்றி விநாயகர், சூரியவம்சம், அந்நியன், கல்யாண சமையல் சாதம், த்ரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன், அசராதவன், அடங்காதவன் உள்ளிட்ட 160-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

நகைச்சுவை கதாபாத்திரங்களில் அசத்தி வந்த அவர் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்தார். இந்த நிலையில், சென்னையில் நீலு இன்று காலமானார். அவருக்கு வயது 82. நீலுவின் மறைவிற்கு திரையுலகத்தினர் மற்றும் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...