தமிழகத்திலும் மனிதக் கழிவுகளை அகற்ற ரோபோக்களை பயன்படுத்தத் திட்டமா..?

கோவை : கேரளாவைத் தொடர்ந்து தமிழகத்திலும் மனிதக் கழிவுகளை அகற்றும் ரோபோக்களை பயன்படுத்த அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தெரிவித்துள்ளது.

கோவை : கேரளாவைத் தொடர்ந்து தமிழகத்திலும் மனிதக் கழிவுகளை அகற்றும் ரோபோக்களை பயன்படுத்த அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தெரிவித்துள்ளது. 



கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் விடுதியில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணை தலைவர் முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியிருப்பதாவது :- 16 மாவட்டங்களில் 5 ஆயிரம் ஏக்கர் பஞ்சமி நிலங்கள் கண்டறியப்பட்டு, 2 ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 

சில இடங்களில் பஞ்சமி நிலங்கள் மீட்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. பெரியகுளம் கலவரத்தின் பின்னணி ஆராயப்பட வேண்டியதாகும். அங்கு சகஜநிலை இன்னும் திரும்பவில்லை. இதுவரை பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமும் வழங்கப்படவில்லை. மேலும், வள்ளியம்மாளின் சடலத்தை எடுத்துச் செல்வதில் ஏற்பட்ட பிரச்சனையில் போலீசார் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த வழக்கின் விசாரணை அதிகாரி மாற்றப்பட வேண்டும்.

துப்புரவு பணியாளர்கள் பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். துப்புரவு பணியாளர்களுக்கு முறையாக ஊதியம் வழங்காத ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். 

கேரளாவில் மனிதக் கழிவுகளை அகற்ற ரோபாக்கள் பயன்படுத்தப்படுவதைப் போல, தமிழகத்திலும் பயன்படுத்த பரிந்துரை செய்துள்ளோம். வருங்காலத்தில் நிதி ஒதுக்கி ரோபாக்கள் பயன்படுத்தப்படுமென அரசும் உறுதியளித்துள்ளது. தனியார் பள்ளிகள் எஸ்.சி.,/எஸ்.டி., இடஒதுக்கீட்டைப் பின்பற்றவில்லை எனில் நடவடிக்கை எடுக்கப்படும். 

நீட் தேர்வினால் மருத்துவப் படிப்பு வாய்ப்பை இழந்த அரியலூர் அனிதா தற்கொலை தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

விவசாய நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்றவர் கைது - கோவை குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை

அரசு வழங்கிய பட்டியலினருக்கான விவசாய நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்து ஏமாற்றியதாக எழுந்த புகாரில், கவுண்டம்பாள...

கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்கள் நியமனம்

கோவை மாவட்டத்திலுள்ள பல்வேறு நீதிமன்றங்களில் அரசு தரப்பில் ஆஜராக 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்களை தமிழக அரசு நியமித்துள்ளத...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...