கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்தவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது'

கோவை: மாநகரில் இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்து வந்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.



கோவை: மாநகரில் இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்து வந்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவையில் பல்வேறு பகுதிகளில் கல்லூரி மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் கஞ்சா எளிதாக கிடைப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, கோவை மாநகர காவல் ஆணையாளர் பெரியய்யா உத்தரவின் பேரில், (தெற்கு) சட்டம்-ஒழுங்கு உதவி ஆணையர் ரமேஷ் கண்ணா தலைமையில் குழு அமைக்கப்பட்டு கஞ்சா விற்பனை செய்பவர்கள் குறித்து கண்காணிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், சுங்கம் பைபாஸ் சாலை பகுதியில் இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த ராஜேஷ் குமார் என்பவரை ராமநாதபுரம் தனிப்படை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்த 35 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

பின்னர் ராஜேஷ் குமாரை விசாரித்ததில், அவர் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும் கோவை, திருப்பூர் போன்ற பகுதிகளில் இளைஞர்களுக்கு போதை பொருட்கள் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. அதனால் ராஜேஷ் குமாரை போதைப்பொருள் தடுப்பு சட்டம் மற்றும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...