விவசாயக் கிணற்றில் விழுந்த 3 காட்டு யானைகள் பத்திரமாக மீட்பு

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உணவு தேடிவந்தபோது, விவசாயக் கிணற்றில் விழுந்த மூன்று காட்டு யானைகள் பத்திரமாக மீட்கப்பட்டு, வனப்பகுதிக்குள் விடப்பட்டன.

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உணவு தேடிவந்தபோது, விவசாயக் கிணற்றில் விழுந்த மூன்று காட்டு யானைகள் பத்திரமாக மீட்கப்பட்டு, வனப்பகுதிக்குள் விடப்பட்டன. 

சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூர் வனப்பகுதியில் இருந்து வந்த மூன்று காட்டு யானைகள் கானக்குந்தூர் கிராமப் பகுதிக்குள் உணவு தேசி நுழைந்தன.

விளைநிலங்கள் வழியாக வந்த அந்த யானைகள், மருதவேல் என்பவருக்குச் சொந்தமான 15 அடி ஆழ விவசாயக் கிணற்றில் தவறி விழுந்தன. சருக்கலான பகுதி வழியாக கிணற்றுக்குள் விழுந்ததால், யானைகளுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. 



இந்த சூழலில், அங்கு சென்ற பொதுமக்கள் யானைகள் நீரில் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து, வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். 

தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற சத்தியமங்கலம் வனத்துறை அதிகாரிகள், கிணற்றுக்குள் தவித்துக் கொண்டிருந்த மூன்று யானைகளையும் ஜே.சி.பி. எந்திரத்தின் உதவியுடன் மீட்டனர். பின்னர் அந்த யானைகளை கடம்பூர் வனப்பகுதிக்குள் சென்று விட்டனர். 



Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...