ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாகப் பேச இதுநேரமல்ல..! ஜக்கிவாசுதேவிற்கு நடிகர் சித்தார்த் பதில்

ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக ஈஷா யோக மையம் நிறுவனர் ஜக்கிவாசுதேவிற்கு எதிராக பலர் கருத்து தெரிவித்து வரும் நிலையில், நடிகர் சித்தார்த் டுவிட்டரில் பதிலளித்துள்ளார்.


ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக ஈஷா யோக மையம் நிறுவனர் ஜக்கிவாசுதேவிற்கு எதிராக பலர் கருத்து தெரிவித்து வரும் நிலையில், நடிகர் சித்தார்த் டுவிட்டரில் பதிலளித்துள்ளார். 

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராட்டம் நடத்தியவர்களில் 11 பேர் போலீசார் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. மேலும், இது தொடர்பான அரசாணையையும் வெளியிட்டது. தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு பலர் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், கோவையில் அமைந்துள்ள ஈஷா யோக மையத்தின் நிறுவனர் ஜக்கிவாசுதேவ், ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார். 

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது :- காப்பரை உருவாக்குவதில் நான் கைதேர்ந்தவன் அல்ல. ஆனால், இந்தியாவில் காப்பர் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நாம் நமது நாட்டில் இதனை தயாரிப்பதில்லை. சீனாவில் இருந்தே இறக்குமதி செய்கிறோம். எனவே, ஸ்டெர்லைட் ஆலையை மூடாமல், சுற்றுச்சூழல் மாசுபடாதவாறு, சட்டவிதிகளுக்குட்பட்டு ஆலையை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மிகப் பெரிய தொழில்களை அழிப்பது பொருளாதார தற்கொலையாகும், இவ்வாறு அவர் பதிவிட்டிருந்தார். 

ஜக்கிவாசுதேவின் இந்தக் கருத்திற்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், நடிகர் சித்தார்த் தனது பங்கிற்கு அவரது கருத்திற்கு பதிலளித்துள்ளார். 



டுவிட்டரில் நடிகர் சித்தார்த் விடுத்துள்ள பதிவில், 'முதலமைச்சர் அலுவலகர் ஒரு வெட்கக்கேடு. பிரதமர் அலுவலகம் யோகாவைத் தவிர வேறு எதைப் பற்றியும் பேசுவதில்லை. காப்பர் உருக்குவதில் பலன்களைப் பற்றி பேச இது சிறந்த நேரம் இல்லை சத்குரு. மக்கள் போலீசாரால் கொல்லப்படுகின்றனர். கொலை பற்றி பேசுங்கள்,' எனக் கூறியுள்ளார்.

Newsletter

தேசிய இணைய பரிமாற்ற மையத்தில் இணைய நிர்வாக பயிற்சிக்கு SRIT மாணவி தேர்வு

கோயம்புத்தூர் Sri Ramakrishna Institute of Technology மாணவி ஷாலினி ஏ., புது தில்லி தேசிய இணைய பரிமாற்ற மையம் (NIXI) வழங்...

விவசாய நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்றவர் கைது - கோவை குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை

அரசு வழங்கிய பட்டியலினருக்கான விவசாய நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்து ஏமாற்றியதாக எழுந்த புகாரில், கவுண்டம்பாள...

கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்கள் நியமனம்

கோவை மாவட்டத்திலுள்ள பல்வேறு நீதிமன்றங்களில் அரசு தரப்பில் ஆஜராக 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்களை தமிழக அரசு நியமித்துள்ளத...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...