கோவை மாநகர காவல்துறை சார்பில் ரத்த தானம் முகாம்

கோவை: கோவை மாநகர காவல்துறை சார்பில் காவலர் பயிற்சிப்பள்ளியில் அமைந்துள்ள மருத்துவமனையில் நடைபெற்ற ரத்த தானம் முகாமில் ஏராளமான போலீசார் ரத்தக் கொடையளித்தனர்.

கோவை: கோவை மாநகர காவல்துறை சார்பில் காவலர் பயிற்சிப்பள்ளியில் அமைந்துள்ள மருத்துவமனையில் நடைபெற்ற ரத்த தானம் முகாமில் ஏராளமான போலீசார் ரத்தக் கொடையளித்தனர். 

தமிழக காவல்துறை சார்பில் இன்று மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான காவல்துறையினர் ரத்ததானம் செய்துள்ளனர். இதன் ஒருபகுதியாக கோவை மாநகர காவல்துறை சார்பில் ரத்ததான முகாம், காவலர் மருத்துவமனை முகாமில் நடைபெற்றது. இந்த முகாமை மாநகர காவல் ஆணையாளர் பெரியய்யா மற்றும் கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் அசோகன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். 



இந்த சிறப்பு ரத்த தானம் முகாமில், கோவை மாநகர காவல்துறை துணை ஆணையாளர் தர்மராஜ் (தலைமையிடம் பொறுப்பு), பெருமாள் (குற்றம்), சுஜித் குமார் (போக்குவரத்து) போன்றோர் கலந்து கொண்டனர்.

இந்த முகாமில், கோவை மாநகர ஆயுதப் படையைச் சேர்ந்த 50 காவலர்கள், கோவை காவலர் பயிற்சிப்பள்ளியின் பயிற்சி பெண் காவலர்கள் 50 பேர் உள்பட மொத்தம் 197 பேர் ரத்த தானம் செய்தனர். இந்த ரத்த தானம் முகாமில் காவல்துறையில் பணியாற்றும் ஆண்கள், பெண்கள் என பலர் ஆர்வமுடன் ரத்த தானம் செய்தனர். அதேபோல, கோவை மாநகர காவல் துணை ஆணையாளர் (போக்குவரத்து) சுஜித்குமார் ஆர்வத்துடன் ரத்த தானம் செய்தார்.



இதேபோல, கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் உட்கோட்ட காவல்துறை சார்பில் ரத்த தானம் முகாம் அரசு மருத்துவமனையில் நடைபெற்றது. இதில் உட்கோட்ட காவல்நிலையத்தை சேர்ந்த மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை, அன்னூர், கருமத்தம்பட்டி ஆகிய காவல் நிலையங்களைச் சேர்ந்த 80-க்கும் மேற்பட்ட காவலர்கள் ரத்த தானம் செய்தனர். இந்த இரத்தத்தை ஏழை எளிய மக்களுக்கு உதவும் நோக்கத்தில் அளிக்கப்பட்டதாகத் துணை கண்காணிப்பாளர் மணி தெரிவித்தார்.



Newsletter

வால்பாறையில் தொடர் மழை: பள்ளி மாணவர்கள், எஸ்டேட் தொழிலாளர்கள் கடும் அவதி

வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை இன்று காலையிலும் நீடித்ததால், பள்ளி மாணவர்கள...

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...