'வண்டியை நிறுத்தவும் வழியில்லை, வாழவும் வழியில்லை': கோவை விமான நிலைய நிறுத்த விதிமுறைகளால் கால் டாக்சி ஓட்டுநர்கள் கவலை

கோவை: கோவை சர்வதேச விமான நிலையத்தில் வாடிக்கையாளர்களை 2 நிமிடத்திற்குள் ஏற்றிக் கொண்டு செல்லாத தனியார் கால் டாக்சிகளுக்கு ரூ. 200 அபராதம் விதிக்கப்படுவதால் ஓட்டுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை சர்வதேச விமான நிலையத்தில் வாடிக்கையாளர்களை 2 நிமிடத்திற்குள் ஏற்றிக் கொண்டு செல்லாத தனியார் கால் டாக்சிகளுக்கு ரூ. 200 அபராதம் விதிக்கப்படுவதால் ஓட்டுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர். 



கோவை சர்வதேச விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான பயணிகள் உள்நாடு மற்றும் வெளிநாடு விமான சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர். இதில், பெரும்பாலான பயணிகள் விமான நிலையம் செல்லவும், அங்கிருந்து மற்ற இடங்களுக்குச் செல்லவும் இணையதளம் மூலம் தனியார் கால் டாக்சிகளை புக்கிங் செய்து பயன்படுத்தி வருகின்றனர். 



இதனிடையே, வாடிக்கையாளர்களை விமான நிலையத்தில் இறக்கிவிடவும், ஏற்றிச்செல்லவும் தனியார் கால் டாக்சிகளுக்கு குறிப்பிட்ட நிமிடங்கள் வரை கட்டணம் வசூல் செய்யாமல் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. அதன்பின், விமான நிலைய கால் டாக்சி ஸ்டாண்டு ஓட்டுநர்கள் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுவதாகக் கூறியதையடுத்து, தனியார் கால் டாக்சிகள் தங்கள் வாடிக்கையாளர்களை விமான நிலையத்திலிருந்து ஏற்றிச் செல்ல தேசியக் கொடி பறக்கும் இடம் அருகே அனுமதிக்கப்பட்டது.



இதனிடையே, 2 நிமிடங்களுக்குள் தங்கள் வாடிக்கையாளர்களை தனியார் கால் டாக்சிகள் ஏற்றிச்செல்லவில்லை எனில், ரூ. 200 கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது என்கிற குற்றச்சாட்டு தற்போது எழுந்துள்ளது.

இது குறித்து தனியார் கால் டாக்சி ஒட்டுநனர் மோசஸ் கூறுகையில், "வாடிக்கையாளர்கள் விமான நிலையம் வந்து சேரும் முன் கால் டாக்சிகளை புக்கிங் செய்து விடுகின்றனர். அதன்பின், விமான நிலையம் முகப்பிலிருந்து அவர்கள் தேசிய கொடி கம்பம் அருகே 600 மீட்டர் தூரம் நடந்து வர வேண்டும். இதற்கு குறைந்தது 5 நிமிடங்களாவது ஆகும். அப்படியிருக்க 2 நிமிடங்களில் எவ்வாறு அவர்களை ஏற்றிச் செல்லமுடியும். அதேசமயம், விமான நிலையம் வெளியே வாடிக்கையாளர்கள் வரும் வரை காத்திருக்கலாம் என்றால் காவல்துறையினர் அதற்கு அனுமதிப்பதில்லை. பார்க்கிங் லாக் போட்டு ரூ. 200 அபராதம் வசூல் செய்கின்றனர். 



மேலும், வாடிக்கையாளர்களிடமே பார்க்கிங் கட்டணம் கேட்டால் வாக்குவாதம் வருகிறது. இதனால், வண்டியை நிறுத்தவும் இடமில்லாமல் வாடிக்கையாளர்களை இழந்து, ஒவ்வொரு முறையும் எங்கள் வருவாயிலிருந்து பணம் கட்டி வாழவும் வழியில்லாமல் உள்ளோம். இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து எங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட வேண்டும்," என்றார்.

இது குறித்து சமூக ஆர்வலர் மனோஜ் கூறியதாவது:- ரயில், பேருந்து மற்றும் விமானப் பயணிகளுக்கு நேரம் வித்தியாசம் உள்ளது. விமானத்திலிருந்து இறங்கி லக்கேஜ் போன்றவற்றை அவர்கள் எடுத்துக் கொண்டு கால்டாக்சி அனுமதிக்கப்பட்ட இடத்திற்கு வருவதற்கு ஆகும் நேரம் ஆகியவற்றை ஆய்வு செய்யாமல் நேரம் தரப்படுவதால் பயணிகள், கால்டாக்சி ஒட்டுநனர்கள் என பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். சொந்த வாகனம் வைத்திருப்போரும் கூட இந்த நேரம் முறை காரணமாக மிகுந்த பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். விமான நிலைய நிர்வாகம் இதனைச் சரி செய்ய வேண்டும், இவ்வாறு அவர் கூறினார். 

இது குறித்து கோவை சர்வதேச விமான நிலைய இயக்குநர் ஆர். மகாலிங்கம் கூறுகையில், "தனியார் கால் டாக்சிகள் பயணிகளை ஏற்றி;rசெல்ல இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதே சமயம். சொந்த வாகனம் வைத்திருப்பார் உள்ளே வரை செல்லலாம். போக்குவரத்து நெருக்கடி போன்ற காரணத்தால் நேரம் வகுக்கப்பட்டுள்ளது. இதனால், பயணிகளுக்குப் பாதிப்பில்லை," என்றார்.

Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 45.8 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 32.95 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 8ஆம் தேதி நிலவரப்படி 45.8 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: தொடர் நீர் வெளியேற்றம்

கோவை மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. ஆழி...

வால்பாறையில் தொடர் மழை: பள்ளி மாணவர்கள், எஸ்டேட் தொழிலாளர்கள் கடும் அவதி

வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை இன்று காலையிலும் நீடித்ததால், பள்ளி மாணவர்கள...

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...