உதகை சட்டமன்ற தொகுதி வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கம் : 17-ம் தேதிக்குள் ஆட்சேபனைகள் தெரிவிக்கலாம்

நீலகிரி: வெளியூர்களுக்கு இடம் பெயர்ந்த நீலகிரி மாவட்டம் இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் பகுதியைச் சேர்ந்தவர்களின் பெயர்கள், உதகை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வாக்காளர்களின் பெயர் பட்டியலில் இருந்து நீக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி: வெளியூர்களுக்கு இடம் பெயர்ந்த நீலகிரி மாவட்டம் இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் பகுதியைச் சேர்ந்தவர்களின் பெயர்கள், உதகை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வாக்காளர்களின் பெயர் பட்டியலில் இருந்து நீக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 



உதகை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி எண்.84-ஐ சேர்ந்த வாக்காளர்கள் இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் பகுதியில் வசித்து வந்தனர். கடந்த ஏப்., 24-ம் தேதியன்று மூடப்பட்டதால், இங்கு வசித்து வந்த பொதுமக்கள் கோவை, மேட்டுப்பாளையம், மைசூரூ, பெங்களூரூ மற்றும் கூடலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கும், மாவட்டத்தின் பிற இடங்களுக்கும் இடம்பெயர்ந்து விட்டனர். 

எனவே, இந்தப் பகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்குட்பட்ட அனைத்து வாக்காளர்களையும், வாக்காளர்பட்டியல் பாகம் எண். 84-ல் இருந்து நீக்கம் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆட்சேபனைகள் ஏதேனும் இருந்தால், வரும் 17-ம் தேதிக்குள் வாக்காளர் பதிவு அலுவலருக்கு எழுத்து மூலமாக தெரிவிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

விவசாய நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்றவர் கைது - கோவை குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை

அரசு வழங்கிய பட்டியலினருக்கான விவசாய நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்து ஏமாற்றியதாக எழுந்த புகாரில், கவுண்டம்பாள...

கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்கள் நியமனம்

கோவை மாவட்டத்திலுள்ள பல்வேறு நீதிமன்றங்களில் அரசு தரப்பில் ஆஜராக 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்களை தமிழக அரசு நியமித்துள்ளத...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...