வரும் 17-ம் தேதி முதல் திருப்பூர் - கோவை இடையிலான ரயில் சேவையில் மாற்றம்

கோவை: கோவை - திருப்பூர் இடையே பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் வரும் 17-ம் தேதி முதல் ஆகஸ்ட் 4-ம் தேதி வரையிலான ரயில் சேவைகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

கோவை: கோவை - திருப்பூர் இடையே பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் வரும் 17-ம் தேதி முதல் ஆகஸ்ட் 4-ம் தேதி வரையிலான ரயில் சேவைகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில்:- 17, 23, 26 ஆக., 02 மற்றும் ஆக., 04 ஆகிய தேதிகளில் சேலம்-கோவை பயணிகள் ரயில் முழுவதும் ரத்து செய்யப்படுகிறது. மேலும், வரும் 17-ம் தேதி கோவை - சென்னை சென்ட்ரல் கோவை எக்ஸ்பிரஸ், எர்ணாகுளம் - கே.எஸ்.ஆர்., பெங்களூரூ இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் - கோரக்பூர் ரப்திசாகர் எக்ஸ்பிரஸ், மங்களூரூ சென்ட்ரல் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் - ஐதராபாத் சபரி எக்ஸ்பிரஸ், பாலக்காடு டவுன் - ஈரோடு பயணிகள் ரயில் ஆகிய ரயில்கள் சூலூர் ரயில் நிறுத்தத்தில் 15 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்படும். 

அலப்புழா - டாடா/தன்பாத் எக்ஸ்பிரஸ் கோவையில் 01.25 மணி நேரம் நிறுத்தி வைக்கப்படும். கோவையில் இருந்து நண்பகல் 12 மணிக்கு புறப்பட வேண்டிய இந்த ரயில், 01.25 மணிக்கு கிளம்பும். 

எர்ணாகுளம் - கே.எஸ்.ஆர்., பெங்களூரூ எக்ஸ்பிரஸ் கோவையில் சுமார் 45 நிமிடங்கள் நிறுத்தப்படும். அதன்படி, மதியம் 12.50 மணிக்கு கிளம்ப வேண்டிய இந்த ரயில், 01.35 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும். 

மேலும், வரும் 19-ம் தேதி மங்களூரூ ரயில்நிறுத்தம் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ், டாடா/தன்பாத் - அலப்புழா எக்ஸ்பிரஸ், ஐதராபாத் - எர்ணாகுளம் சிறப்பு ரயில், ஷாலிமார் - திருவனந்தபுரம், கே.எஸ்.ஆர்., பெங்களூரூ - எர்ணாகுளம், சென்னை சென்ட்ரல் கோவை எக்ஸ்பிரஸ், சென்னை சென்ட்ரல் கோவை சதாப்தி எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் சூலூர் ரயில் நிறுத்தத்தில் 15 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்படும். 

இதேபோல, வரும் 23-ம் தேதி தாமதமாக இயக்கப்படும் ரயில்கள் : கோவை - சென்னை சென்ட்ரல் கோவை எக்ஸ்பிரஸ், கோவை - சென்னை சென்ட்ரல் கோவை சதாப்தி எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் - கோர்பா, மங்களூரூ சென்ட்ரல் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் - ஐதராபாத் சபரி எக்ஸ்பிரஸ், பாலக்காடு டவுன் - ஈரோடு பயணிகள் ரயில் ஆகியவை இருகூர் ரயில் நிறுத்தத்தில் இருந்து 15 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும்.

26-ம் தேதி ஜெய்ப்பூர்- கோவை அதிவிரைவு எக்ஸ்பிரஸ், ஈரோடு ரயில்நிறுத்தத்தில் சுமார் 30 நிமிடங்கள் நிறுத்தப்படும். இதேபோல, கோவை - சென்னை சென்ட்ரல் கோவை எக்ஸ்பிரஸ், கோவை சென்னை சென்ட்ரல் சதாப்தி எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் - கோர்பா, மங்களூரூ சென்ட்ரல் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் - ஐதராபாத் சபரி எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் சுமார் 15 நிமிடங்கள் இருகூர் ரயில் நிறுத்தத்தில் இருந்து தாமதமாக இயக்கப்படும். 

வரும் 28-ம் தேதி தாமதமாக இயக்கப்படும் ரயில்கள்:-

அலப்புழா - டாடா/தன்பாத் எக்ஸ்பிரஸ் கோவையில் 01.10 மணி நேரம் நிறுத்தி வைக்கப்படும். கோவையில் இருந்து நண்பகல் 12 மணிக்கு புறப்பட வேண்டிய இந்த ரயில், 01.10 மணிக்கு கிளம்பும்.

எர்ணாகுளம் - கே.எஸ்.ஆர்., பெங்களூரூ எக்ஸ்பிரஸ் கோவையில் சுமார் 35 நிமிடங்கள் நிறுத்தப்படும். அதன்படி, மதியம் 12.50 மணிக்கு கிளம்ப வேண்டிய இந்த ரயில், 01.25 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும். 

இதேபோல, மங்களூரூ சென்ட்ரல் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ், டாடா/தன்பாத் - அலப்புழா எக்ஸ்பிரஸ், பாட்னா - எர்ணாகுளம், கே.எஸ்.ஆர்., பெங்களூரூ - எர்ணாகுளம், சென்னை சென்ட்ரல் கோவை எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் சுமார் 15 நிமிடங்கள் இருகூர் ரயில் நிறுத்தத்தில் நிறுத்தி வைக்கப்படும்.

30-ம் தேதி தாமதமாக இயக்கப்படும் ரயில்கள்:

அலப்புழா - டாடா/தன்பாத் எக்ஸ்பிரஸ் கோவையில் 01.10 மணி நேரம் நிறுத்தி வைக்கப்படும். கோவையில் இருந்து நண்பகல் 12 மணிக்கு புறப்பட வேண்டிய இந்த ரயில், 01.10 மணிக்கு கிளம்பும்.

எர்ணாகுளம் - கே.எஸ்.ஆர்., பெங்களூரூ எக்ஸ்பிரஸ் கோவையில் சுமார் 35 நிமிடங்கள் நிறுத்தப்படும். அதன்படி, மதியம் 12.50 மணிக்கு கிளம்ப வேண்டிய இந்த ரயில், 01.25 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும்.

இதேபோல, சென்னை எழும்பூர் - மங்களூரூ சென்ட்ரல் எக்ஸ்பிரஸ், டாடா/தன்பாத் - அலப்புழா எக்ஸ்பிரஸ், கே.எஸ்.ஆர்., பெங்களூரூ - எர்ணாகுளம், சென்னை சென்ட்ரல் கோவை எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் சுமார் 15 நிமிடங்கள் இருகூர் ரயில் நிறுத்தத்தில் நிறுத்தி வைக்கப்படும்.

02-ம் தேதி தாமதமாக இயக்கப்படும் ரயில்கள்: ஜெய்ப்பூர்- கோவை அதிவிரைவு எக்ஸ்பிரஸ், ஈரோடு ரயில்நிறுத்தத்தில் சுமார் 40 நிமிடங்கள் நிறுத்தப்படும். 

04-ம் தேதி தாமதமாக இயக்கப்படும் ரயில்கள்: கோவை - சென்னை சென்ட்ரல் கோவை எக்ஸ்பிரஸ், கோவை சென்னை சென்ட்ரல் சதாப்தி எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் - இந்தூர், மங்களூரூ சென்ட்ரல் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் - ஐதராபாத் சபரி எக்ஸ்பிரஸ், பாலக்காடு டவுன் - ஈரோடு பயணிகள் ரயில் ஆகியவை சுமார் 15 நிமிடங்கள் பீளமேடு ரயில் நிறுத்தத்தில் இருந்து தாமதமாக இயக்கப்படும். இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 48.07 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 29.59 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 11ஆம் தேதி நிலவரப்படி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நிலவரம்

கோவை மாவட்டத்தில் ஜூலை 11 நிலவரப்படி ஆழியாறு அணையில் 55.4 அடி, பரம்பிக்குளம் அணையில் 18.24 அடி, சோலையாறு அணையில் 91.21 அ...

கோவையில் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவுக்கு இறுதி வாய்ப்பு; ஜூலை 31-க்குள் நிறைவு செய்ய அறிவுறுத்தல்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 3.97 லட்சம் பயனாளிகள் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவு செய்யாமல் நிலுவையில் உள்ளனர். ஜூலை 31, 20...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...