7 கோடி மோசடி! செருப்பால் அடித்த மக்கள்!


கோவையில் 7 கோடிக்குமேல் மோசடி செய்த நபரை பாதிக்கப்பட்டவர்கள் செருப்பால் அடித்ததால் பரபரப்பு.

திருச்சியைச்சேர்ந்த சின்னசாமி கணபதி பகுதியில் மெட்குயுர் என்ற பெயரில் மருந்தகம் நடத்தி வந்தார், திருச்சியை சேர்ந்த பெல் நிறுவனதில் ஒப்பந்த செய்துள்ளதாகவும், அதற்கு பொது மக்கள் ஒரு லட்சம் முதலீடு செய்தால் பத்து மாதத்தில் ஊக்கத்தொகையுடன் ஒரு லட்சத்தி பத்தாயிரமாக வழங்கப்படும் என ஆசை வர்த்தை கூறியதை நம்பி கோவையில் வசிக்கும் 70க்கும் மேற்பட்டவர்கள் ரூபாய் ஒரு லட்சம் முதல் பத்து லட்சம் வரை தங்கள் வசதிக்கு ஏற்ப முதலீடு செய்துள்ளனர். இந்நிலையில் கடந்த மாதம் செலுத்திய தொகை குறித்து முதலீடு செய்தவர்கள் கேட்ட போது, பெல் நிறுவனத்துடன் எந்த ஒரு ஓப்பந்தமும் செய்யவில்லை , மகிழ்ச்சியாக வாழ பணம் தேவைப்பட்டதால்தான் உங்களை ஏமாற்றி பணம் பறித்ததாக கூறியுள்ளார். 

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த முதலீட்டாளர்கள் கோவை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளனர் .புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட சின்னச்சாமி இன்று விசாரணைக்காக மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்திலுள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் வந்துள்ளார். விசாரணை முடிந்த பின்பு வெளியே வந்த சின்னச்சாமியை சூழ்ந்த முதலீட்டாளர்களில் ஒருவர் செருப்பால் அவரை தாக்கியதால் அதிர்ச்சியடைந்த காவல் துறையினர் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து சின்னசாமியை பத்திரமாக அழைத்து சென்றனர்.

பாதிக்கப்பட்டவர்கள் கூறும்போது இந்த மோசடியில் சின்னச்சாமியின் குடும்பம் முழுவதும் ஈடுபட்டுள்ளதாகவும், முதலீட்டாளர்களிடம் பெற்ற பணத்தில் திருச்சியில் வீடு, நிலம்,200 பவுன் நகைகள் மற்றும் கார்கள் அதிக அளவில் வாங்கியிருப்பதாகவும்,அதை மீட்டு தங்களது முதலீட்டு பணத்தை மீட்டுத்தருமாறு காவல் துறையினரிடம் முறையீட்டனர்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...