கோவையில் நோய்வாய்ப்பட்டுள்ள வாழ்நாள் சிறைவாசிகள் விடுதலை செய்ய வேண்டும்


கோவை சிறையில் இன்று ஆயுள் சிறைவாசி அப்துல் ஒசீர் மரணம் தொடர்பாக கோவை சிறையில் நோய்வாய்ப்பட்டுள்ள வாழ்நாள் சிறைவாசிகள் அனைவரையும் தமிழக அரசு விடுதலைச் செய்ய வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா பத்திரிகை அறிக்கை இன்று வெளியிட்டுள்ளார்.

 

 கோவை மத்திய சிறையில் ஆயுள் சிறைவாசம் அனுபவித்து வந்த இதய நோயாளியான அப்துல் ஒசீருக்கு இன்று காலை கடும் மாரடைப்பினால் மரணம் அடைந்துள்ளார். சிறையிலேயே மாரடைப்பு ஏற்பட்டு பிறகு கோவை அரசினர் தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது உயிர் பிரிந்துள்ளது, ஏற்கெனவே இதய நோயாளியாக இருந்த அப்துல் ஒசீர் தனது இறுதி நாட்களை சிறையிலேயே கழித்து மரணம் அடைந்துள்ளது வேதனைக்குரியதாக உள்ளது.

10 ஆண்டுகளுக்கு மேல் வாழ்நாள் சிறைவாசம் அனுபவித்து விட்ட சிறைவாசிகளை விடுதலைச் செய்ய வேண்டுமென்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட அரசியல் மற்றும் சமுதாய அமைப்புகள் நீண்ட காலமாக போராடி வருகின்றன. கடந்த 14வது தமிழக சட்டமன்றத்தில் இந்த கோரிக்கையை பல முறை மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக முன்வைக்கப்பட்டது. பல்வேறு போராட்டங்களையும் நடத்தியுள்ளோம்.

குறைந்த பட்சம் கடும் நோயினால் அவதிப்படும் ஆயுள் சிறைவாசிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுதலைச் செய்யவும் தமிழக அரசிடம் பல முறை கோரிக்கை வைத்துள்ளோம். ஆனால் இந்த கோரிக்கைகளை ஆளும் அதிமுக அரசு நிறைவேற்றவில்லை. இதன் விளைவாக சமீப காலமாக ஆயுள் சிறைவாசியாக கோவை சிறையில் மட்டும் மரணித்த முஸ்லிம்களில் அப்துல் ஒசீர்  மூன்றாவது நபர் ஆவார். தஸ்தகீர் என்ற ஆயுள் சிறைவாசி குடல்வால் அறுவை சிகிச்சைக்கு பிறகு சிறையில் முறையான தொடர் சிகிச்சைகள் இல்லாததால் மரணித்தார். இதே போல் 17 ஆண்டுகள் ஆயுள் தண்டனை அனுபவித்த சபூர் ரஹ்மான் (20 வயதில் சிறைக்குச் சென்றவர்) தனது 37 வது வயதில் சிறையிலேயே இதய நோயினால் மரணித்தார். தற்போது 19 ஆண்டுகள் ஆயுள் தண்டனை அனுபவித்த அப்துல் ஒசீர் இதய நோயினால் பாதிக்கப்பட்டு சிறையில் தண்டனை அனுபவிக்கும் நிலையில் மரணித்துள்ளார். இன்னொரு ஆயுள் சிறைவாசி சிறையிலேயே மரணிக்கும் முன் தமிழக அரசு உடனடியாக 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்துள்ள அனைத்து சிறைவாசிகளையும் விடுதலைச் செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

ஆண்டுதோறும் தமிழக சிறைகளில் பல்வேறு நோய்களினால் பாதிக்கப்படும் சிறையிலேயே சராசரியாக 60 பேர் மரணிக்கின்றார்கள் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கின்றது. தமிழ்நாடு சிறைவிதிகளின் படி கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டுள்ள சிறைவாசிகளை விடுவிக்க மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் உண்டு. இந்த அடிப்படையில் சிறையில் நோய்வாய்ப்பட்டுள்ள அனைத்து ஆயுள் சிறைவாசிகளையும் தமிழக அரசு உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ்நாடு சிறைவிதிபடி ஆயுள்தண்டனை பெற்ற 65 வயதுக்கு மேலான முதியவர்களையும் விடுதலை செய்யவேண்டும். இரண்டு பெண் மகளுக்கு தந்தையான அப்துல் ஒசீரின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

 சகோதரர் அப்துல் ஒசீர் அவர்களை இழந்து பரிதவிக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு மனிதநேய மக்கள் கட்சி சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...