ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து மருத்துவமனைக்கு ராகுல் காந்தி நேரில் சென்றார்

தமிழக முதல்வர் ஜெயலலிதா  சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கபட்டதிலிருந்து காய்ச்சசல், நீர்சத்து குறைவு மற்றும் நோய் தொற்று உள்ளிட்ட பல்வேறு உபாதைகளால் அவர் தொடர் சிகிச்சை பெற வேண்டும் என மருத்துவமனை நிர்வாக அறிக்கைகள் வெளியிட்டது. இந்நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து கேட்டறிய, ராகுல் காந்தி இன்று திடீர் பயணமாக சென்னை வந்துள்ளார். இப்பயணம் முன்கூட்டியே திட்டமிடப்படாத திடீர் பயணமாகவே கருதப்படுகிறது. ராகுல் காந்தியின் வருகையை முன்னிட்டு, சென்னை அப்பல்லோ மருத்துவமனையிலும், அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.



சென்னை அப்போலோ மருத்துமனையில் கடந்த 2 வாரங்களுக்கு முன் தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை காய்ச்சசல் மற்றும் நீர்சத்து குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சிறப்பு விமானம் மூலம் சென்னைக்கு வந்த  முதல்வர் ஜெயலலிதா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள அப்போலோ மருத்துவமனைக்கு நேரில் சென்று ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து மருத்துவர்களை நேரடியாக கேட்டறிந்தார். ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் குழு, ராகுல் காந்தியிடம் விளக்கினர். 

சென்னை அப்போலோ மருத்துமனை சென்று ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் விசாரித்த பின், முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னனேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், ஜெயலலிதா குணமடைந்து வருவதாக மருத்துவர்கள் குறிப்பிட்டதாக தெரிவித்தார். விரைவில் அவர் நலம் பெறுவார் என்றும் ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் ஜெயலலிதா விரைவில் குணமடைய காங்கிரஸ் சார்பில் வாழ்த்து தெரிவித்து கொள்வதாக கூறினார். அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசரும், ராகுல் காந்தியுடன் மருத்துமனைக்கு வந்திருந்தார்.

Newsletter

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...

துடியலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர், பொதுமக்கள் சார்...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்...

புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் 50 கிலோ சந்தனத்தில் விநாயகருக்கு ராஜ அலங்காரம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் 50 கிலோ சந்தனம் மற்றும் இரண்டு டன் மலர்களால் ரா...

வரசித்தி விநாயகருக்கு வெள்ளி கவசம் - ரூ.10 லட்சம் நோட்டுகளால் அலங்காரம்

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயக பெருமானுக்கு வெ...