92 சதவிகித மக்கள் சுகாதாரமற்ற காற்றையே சுவாசிக்கின்றனர்..! புள்ளிவிவரத்தை வெளியிட்ட உலக சுகாதார ஆணையம்

இந்த உலகில் 92 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட மக்கள் சுகாதாரமான காற்று இல்லாமல் மோசமான மற்றும் மாசடைந்த காற்றையே சுவாசித்து வருகின்றனர் என உலக சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், காற்று மாசடைந்துள்ள பகுதிகளையும், எதனால் மாசு ஏற்பட்டுள்ளது என்பது குறித்தான பட்டியலையும் அந்த ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில், மஞ்சள், இளம்சிவப்பு, சிவப்பு, மற்றும் ஊதா ஆகிய வண்ணங்கள் மூலம் வகைப்படுத்தி காற்றுமாசின் தன்மையை விளக்கியுள்ளது.  

 

இதில், ஆப்பிரிக்கா, கிழக்கு ஐரோப்பா, இந்தியா, சீனா மற்றும் மத்திய கிழக்கு பிராந்திய நாடுகள் காற்றுமாசில் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன என அந்த ஆணையம் அறிவித்துள்ளது. இப்பகுதியில் அதிகப்படியான மக்கள் இதனாலேயே உயிரிழக்கின்றனர் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

 

மேலும், அந்த நாடுகளைப்போலவே அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து உள்ளிட்ட நாடுகள் அதிகளவில் காற்றுமாசினால் பாதிக்கப்பட்டிருந்தாலும் முறையான விழிப்புணர்வு மூலம் அந்த மாசுவில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்கின்றனர். இதனால் அதிகப்படியான உயிரிழப்புகள் தடுக்கப்படுகிறது.  

 

காற்றுமாசானது நாடுகளுக்கு இடையே மாறுபடுகிறது. எடுத்துக்காட்டாக இத்தாலியில் தொழிற்சாலைகள் அதிகம் உள்ளதால் அப்பகுதியில் மோசமான நிலையில் காற்று மாசடைந்து உள்ளது.  

 

உலக சுகாதார ஆணையம் சமீபத்தில் ஆய்வு ஒன்றில் ஈடுபட்டது. அதில், வெளிப்புற காற்று மாசினால் அதிகளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. வாகனப்புகை, மின்சாரம் தயாரிக்கும் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகை ஆகியவற்றாலேயே சுமார் 3 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர் என அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.  

 

மேலும், புகை பிடித்தல், சமையல் எரிவாயு உள்ளிட்டவற்றாலும் பெரும்பாலான மக்கள் உயிரிழந்துள்ளனர். மொத்தமாக 2012யில் வெளிப்புற மற்றும் உட்புற காற்று மாசினால் உலகளவில் 6.5 மில்லியன் மக்கள் பலியாகியுள்ளனர். இது, எச்ஐவி மற்றும் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஈடாக உள்ளதாக அந்த ஆணையம் அறிவித்துள்ளது.  

 

இந்த வரைபடம் செயற்கை கோள், வான்வெளிப் போக்குவரத்து ஆகியவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில், சல்பேட், நைட்ரேட் மற்றும் கருப்பு கார்பன் ஆகிய நச்சு வாயுக்கள் காற்றில் கலந்திருப்பது தெளிவாக காட்டப்பட்டுள்ளன. 

 

பெண்கள், குழந்தைகள் அதிகளவில் இதில் பாதிக்கப்படுகின்றனர் என்கிறார் உலக சுகாதார ஆணையத்தின் துணை இயக்குனர் டாக்டர் ஃலேவியா பூஸ்ட்ரியோ. மக்கள் அனைவரும் சுத்தமான, சுகாதாரமான காற்றையே பிறப்பு முதல் இறப்பு வரை சுவாசிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

 

அதிகளவில் காற்று மாசுபட்டு வரும் இந்த சூழ்நிலையில் உடனடி நடவடிக்கை எடுத்து மாசைக் கட்டுப்படுத்த வேண்டும். மக்களிடம் இதுகுறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என உலக சுகாதார ஆணையம் அறிவித்துள்ளது.

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...