வலிமையான பெண்களே வலிமையான தேசம்..!

சர்வதேச அளவில் அக்டொபர் 11ம் தேதி பெண் குழந்தைகள் தினமாக அறிவிக்கப்பட்டு கடந்த 2012ம் வருடம் முதல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 
பெண் குழந்தை என்றாலே வீட்டில் ஒரு மகாலக்ஷ்மி பிறந்து விட்டதாகவே பெரும்பாலான பெற்றோர்கள் தற்போது கொண்டாடி மகிழ்கின்றனர். இவுலகின் வலிமை மிக்க தூண்களாகவே அவர்கள் போதிக்கப்படுகின்றனர். 

அனைத்து துறைகளிலும் காலூன்றி கல்வி, அறிவியல் துறை, ராணுவம் என எவ்வித வரைமுறையும் இன்றி செயல்படும் பெண்களின் சாதனை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. 

முன்னொரு காலத்தில் பெண்பிள்ளை என்றாலே பெற்றோர்களுக்கு சுமையாகவும், ஆண்களுக்கு சேவை செய்ய மட்டுமே என அவர்கள் கருதப்பட்டு வந்தனர். வாழ்க்கை சிறியதாக, சுதந்திரத்தை சமையல் அறையில் மட்டுமே பெண் அனுபவித்து வந்தால். ஒருகட்டத்தில் பெண் சிசுவை கொலை செய்யும் சம்பவங்களும் அதிகம் அரங்கேறின. இதன் விளைவு தற்போது ஆண்களின் எண்ணிக்கை விகிதத்தை விட பெண்களின் விகிதம் குறைவாகவே உள்ளது. 

இவ்வாறான பல்வேறு ஒடுக்குமுறைகளை அனுபவித்து வரும் பெண்களை காக்க அரசும், பல அமைப்புகளும் இணைந்து பெண்களுக்கென பாதுகாப்பு சட்டங்களை உருவாக்கி அதனை செயல்படுத்த தொடங்கியது. இதனால், அவர்களின் மீதான ஒடுக்குமுறைகள் ஓரளவிற்கு குறைக்கப்பட்டது. 

இருப்பினும் முழுமையான சுதந்திரதை அவர்களால் அனுபவிக்க முடிவதில்லை. இன்றளவும் வன்முறைகளும், பாலியல் வன்புணர்ச்சிகளும் பெண்களின் மீது தொடுக்கப்பட்டே வருகிறது. பெண்கள் வெறும் போகப்பொருள் அல்ல. அவர்கள் இந்த உலகின் வலிமை மிக்க தூண்கள் என அனைவரும் உணர வேண்டும்.

இந்நாளில் பெண்களை போற்றி, பெண் குழந்தைகளை பாதுகாப்போம். அவர்களுக்கான சுதந்திரமான ஒரு சமூகத்தை உருவாக்குவோம் என உறுதிமொழி ஏற்போம்.

Newsletter

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...