முஹர்ரம் பண்டிகை

இஸ்லாமியர்களுக்கு என்று அல்லாஹ் அனுமதித்த மற்றும் அல்லாஹ்வின் ரசூல் முகம்மது நபி(ஸல்) அவர்கள் காட்டி தந்த இரண்டு பண்டிகைகள் மட்டுமே இஸ்லாமிய பெருமக்களுக்கு கொண்டாடப்பட வேண்டிய பெருநாட்கள் ஆகும். 1.அரபி மாதமான 9வது மாதம் ரமலான்,  இம்மாதம் முழுவதும் 30  நாட்கள் நோன்பு இருந்து அந்த நோன்புகளை முடித்த பிறகு 10வது அரபி மதமான ஷவ்வால் மாதத்தில் முதல் தேதி (முதல் பிறை) அன்று கொண்டாடப்படுவது ரமலான் பண்டிகை. 2.துல்ஹஜ் என்ற 12வது அரபி மாதத்தில் பிறைகள் 10, 11, 12 ஆகிய மூன்று தினங்கள் மட்டும் கொண்டாடப்படும் தியாகாதிருநாள் என்னும் ஹஜ் பண்டிகைகள் ஆகும்.



இந்த இரண்டு பண்டிகை  நாட்களில் மட்டும் நோன்புகள் நோற்க கூடாது என்றும் நபி (ஸல்) அவர்கள் தடுத்தும் இருக்கிறார்கள். இந்த நாட்களில் இறை வணக்கம் செலுத்திவிட்டு, வயிறாற சாப்பிட்டும், உணவில்லாதவர்களுக்கு உணவுகள்கொடுத்தும், பண உதவிகள் செய்தும், தான தர்மங்கள் செய்தும், புத்தாடை உடுத்தியும் மிகவும் சிறப்பாகக்கொண்டாடச்  சொல்லி தந்திருக்கிறார்கள் இறை தூதர் முகம்மது நபி(ஸல்)அவர்கள்.

முஹர்ரம் மாதத்தின் சிறப்பு:

அரபி மாதத்தின் முதல் மாதமான முஹரம் என்ற மாதம் இது. இந்த மாதத்தின் சிறப்பு என்னவென்றால், முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு முன்னால் வாழ்ந்த இறை தூதரான மூஸா (அலை) அவர்களால் ப்ரவுன் என்ற கொடுங்கோல் ஆட்சியாளனை கடலில் அல்லாஹ் மூழ்கடித்து, மூஸா (அலை) அவர்களைவெற்றி பெற செய்த நாள்தான் இந்த முஹர்ரம் மாதத்தின் பிறை 10-ஆம் நாள் ஆகும். முஹம்மது (ஸல்) அவர்கள்காலத்தில் வாழ்ந்த யூதர்கள் இந்த மாதத்தின் 10-ஆம் நாள் அன்று நோன்பு நோற்று வந்தார்கள். அவர்களை கண்ட நபிகள் பெருமானார் எதற்காக நீங்கள் நோன்பு நோற்கிறீர்கள் என்று வினாவினார்கள். அவர்கள் மூஸா (அலை) அவர்கள் ப்ரவுனை வெற்றி பெற்ற இந்த நாளை நாங்கள் நன்றி சொல்லும் விதமாக நோன்புநோற்று வருகிறோம் என்றும் சொன்னார்கள். அப்பொழுதுதான் நபி (ஸல்) சொன்னார்கள், மூஸா (அலை)அவர்கள் வெற்றி பெற்ற இந்த நாளுக்கு நன்றி சொல்வதற்க்கு உங்களைவிட நாங்களே சிறந்தவர்கள் என்றுகூறிவிட்டு, அன்றைய தினத்திலிருந்து இஸ்லாமியர்களை முஹரம் 10-ஆம் நாள் நோன்பு நோற்க சொல்லிதந்தார் நமது நபி அவர்கள்.

ஆனால் தான் இறப்பதற்கு முந்தைய வருடம் நபி (ஸல்) அவர்கள், அடுத்த வருடம் நான் உயிரோடு இருந்தால்,யூதர்களை போலவே நாமும் 10-ஆம் நாள் மட்டும் நோன்பு நோற்க கூடாது, நாம் அதற்கு வித்தியாசமாக,இன்னும் கூடுதலாக 9, 10 ஆகிய இரண்டு நாட்களும் சேர்ந்து நோன்பு நோற்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்கள். ஆனால் அதை அறிவித்த அடுத்த வருடம் நபி (ஸல்) இந்த பூமியில் உயிரோடு இல்லை. இறைவனடி சேர்ந்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் காட்டி தந்த இந்த நோன்பைதான் ஆஷூரா நோன்பு என்று அழைக்கப்படும். முஹர்ரம் மாதத்தின் பிறை 9,10 அல்லது 10,11 ஆகிய இரண்டு நாட்கள் நோன்பு நோற்றால் அல்லாஹ் ஒரு வருடகால பாவங்களை மன்னிப்பான் என்று முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அறிவித்து இருக்கிறார்கள்.

எனவே, உலக முஸ்லீம்கள் அனைவரும் இந்த இரண்டு தினங்களும் நோன்பு நோற்று, இந்த சுன்னத்தான வழிமுறையைபினை பின்பற்றி வருகின்றனர். இந்த நோன்பு நோற்போர்களின் ஒரு வருட கால குறைகளையும், பாவங்களையும் அல்லாஹ் மன்னிப்பான் என்று நம்பிக்கை கொண்டு அனைவருக்காகவும் இந்த முஹரம் மாதத்தில் நோன்புநோற்று பிராத்தனை செய்கின்றனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...