பைக் திருட்டில் ஈடுபட்ட சிறுவன் உட்பட 3 பேர் கைது


சென்னை: பைக் திருட்டில் ஈடுபட்ட சிறுவன் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 10 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை அண்ணா சாலை, திருவல்லிக்கேணி, சேப்பாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் அடிக்கடி பைக்குகள் திருடு போவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில், அண்ணா சாலை போலீசார் இரவு நேரங்களில் தீவிர ரோந்து பணி மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டனர். 

நேற்று முன்தினம் இரவு ஸ்பென்சர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டபோது, ஒரு பைக்கில் வந்த 3 பேரை மடக்கி, பைக் ஆவணங்களை கேட்டபோது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.

அதில், ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்த ராஜேஷ் (20), கவுதம் (19) மற்றும் குமார் (17, பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்றும், அவர்கள் ஓட்டி வந்தது திருட்டு பைக் எனவும் தெரிந்தது. அவர்களிடம் தீவிர விசாரணை நடத்திய போது அண்ணா சாலை, திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் இரவு நேரத்தில் சாலையோரம் நிறுத்தப்படும் பைக்குகளை திருடியது தெரியவந்தது.  அவர்களை கைது செய்து, அவர்களிடம் இருந்து 10 பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...