அப்துல் கலாம் 85-ஆவது பிறந்த நாளையொட்டி, ரூ.15 கோடியில் மணி மண்டபம்

ஏ.பி.ஜெ.அப்துல் கலாமின் 85-ஆவது பிறந்த நாளையொட்டி, இராமேஸ்வரத்தில் உள்ள அவரது சமாதி வளாகத்தில் ரூ.15 கோடியில் மணி மண்டபம் கட்டுவதற்கான பணிகள் சனிக்கிழமை நாளை தொடங்க உள்ளது.

முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ அப்துல் கலாம் சமாதி வளாகத்தில் அவரது வாழ்க்கை வரலாறு கண்காட்சி, அறிவுசார் மையம், நினைவு மண்டபம் ஆகியவற்றை அமைக்க இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு மூலம் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வந்தது. இதற்காக கடந்த ஜூலை 27-ஆம் தேதி நடைபெற்ற முதலாம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சியில் திட்டப்பணிகள் தொடங்குவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

இதையடுத்து அப்துல்கலாமின் 85-ஆவது பிறந்த நாளையொட்டி, முதல்கட்டமாக 27 ஆயிரம் சதுர மீட்டர் நிலப்பரப்பில் ரூ.15 கோடி மதிப்பில் மணிமண்டபம் கட்டுவதற்கான பணி சனிக்கிழமை பூமி பூஜையுடன் தொடங்கப்படவுள்ளது.

இதையொட்டி, இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் கட்டடப் பிரிவு பொறியாளர் சீனிவாசலு தலைமையில் சமாதி வளாகப் பகுதியில் ஆய்வு நடைபெற்றது. மணிமண்டபம் கட்டப்படும் பகுதியில் வரைபடத்தின்படி அளவீடு செய்து குறியீடு கம்பிகள் ஊன்றும் பணிகளில் பொறியாளர்கள் ஈடுபட்டனர்.

இதுகுறித்து திட்டப்பணி ஒப்பந்தகாரர் ஜெகநாதன் தெரிவித்ததாவது: 

அப்துல் கலாம் மணிமண்டபம் அமைக்கும் பணிகள் பூமி பூஜையுடன் சனிக்கிழமை தொடங்கப்படவுள்ளன. இந்தப் பணிகளை 2017-ஆம் ஆண்டு ஜூலை 10-ஆம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அப்துல் கலாமின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தன்று புதிய மணி மண்டபத்தை திறந்து, அதில் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இரண்டாம் கட்டப்பணியாக ரூ. 35 கோடி மதிப்பில் அறிவுசார் மையம் மற்றும் கண்காட்சி மையம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கும் என அவர் தெரிவித்தார்.

Newsletter

கரூர் தேர்தல் களத்தில் பரபரப்பு: செந்தில் பாலாஜி ஆதரவாளர்களுக்கு சொந்தமான இடங்களில் ஐடி ரெய்டு..!

கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களுக்கு சொந்தமான 7 இடங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று கா...

“எடப்பாடி சொல்வது போல யாருடைய காலிலும் விழுந்த அனுபவம் எனக்கு இல்லை” - காங்கேயத்தில் உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேச்சு..!

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின...

கோவை வடக்கில் வானதிக்கு ஆதரவாக BJP மாநில செயலாளர் அஸ்வத்தாமன் தீவிர பரப்புரை

கோவை வடக்கு தொகுதியில் BJP வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் ஓணாம்பாளையத்தில் இன்று பரப்பு...

கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பிஆர்ஜி அருண்குமார் தீவிர பிரசாரம்

கவுண்டம்பாளையம் தொகுதி அதிமுக வேட்பாளர் பிஆர்ஜி அருண்குமார் பெரியநாயக்கன்பாளையம் சுற்றுப்பகுதிகளில் வீடு வீடாக சென்று பி...

கோவை தெற்கு தொகுதி: ராமநாதபுரம் பகுதிகளில் அதிமுக வேட்பாளர் அம்மன் கே.அர்ஜுனன் வாக்கு சேகரிப்பு

கோவை தெற்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் அம்மன் கே.அர்ஜுனன் ராமநாதபுரம் வார்டு 66 உட்பட பல பகுதிகளில் வீடு வீடாகச் சென்று...

ஆவாரம்பாளையம் காய்கறி சந்தையில் தேங்காய் விற்று வாக்கு சேகரித்த K.R. Jayaram

கோவை சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K.R. Jayaram ஆவாரம்பாளையம் காய்கறி சந்தையில் தேங்காய் விற்பனையில் ஈடுபட்டு வா...