முதல்வர் உடல்நலம் குறித்து அவதூறு: பொள்ளாச்சியில் திமுக கவுன்சிலர் உள்ளிட்ட 20 பேர் மீது வழக்கு

பொள்ளாச்சி திமுக நகர்மன்ற உறுப்பினர் உள்ளிட்ட 20 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து முகநூலில் அவதூறு பரப்பியதாக பொள்ளாச்சி நகர்மன்ற 8-ஆவது வார்டு திமுக உறுப்பினர் நவநீதகிருஷ்ணன் உள்ளிட்ட 20 பேர் மீது கவைத்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். திமுக உறுப்பினர் நவநீதகிருஷ்ணன், திமுக இளைஞரணியிலும் முக்கியப் பொறுப்பில் உள்ளார். 

நவநீதகிருஷ்ணன், முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து கடந்த 13-ஆம் தேதி தனது முகநூல் பக்கத்தில் அவதூறு பரப்பும் விதமாக கவிதையைப் பதிவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்தக் கவிதையை ராஜீவ் காந்தி என்பவர் உள்ளிட்ட 20 பேர் பகிர்ந்துள்ளனர். இதுகுறித்து மகாலிங்கபுரம் காவல் துறையினரிடம் பொள்ளாச்சி நகர்மன்றத் தலைவரும், அதிமுக நகரச் செயலாளருமான கிருஷ்ணகுமார் புகார் அளித்தார்.

இந்தப் புகாரின் பேரில், நவநீதகிருஷ்ணன், ராஜீவ் காந்தி உள்ளிட்ட 20 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

Newsletter

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...

Truck Carrying Illegal Gravel Seized on L&T Bypass in Coimbatore

Officials from the Department of Geology and Mining in Coimbatore seized a tipper lorry carrying around three units of g...