போனஸ் வழங்கக் கோரி ஆட்சியரிடம் மனு அளித்த துப்புரவு தொழிலாளர்கள்

கோவை மாவட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிவரும் துப்புரவு தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழக்கக் கோரி அப்பணியாளர்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர். 

இதைத்தொடர்ந்து, அவர்களுடன் வந்த தமிழ்நாடு தூய்மை தொழிலாளர் சங்கத்தின் மாநில ஆலோசகர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கோவையில் 2500க்கும் மேற்பட்ட ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் துப்புரவு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 6 முதல் 8 வருடம் பணியாற்றி வரும் இவர்களுக்கு மாத ஊதியமாக 6000 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது. மருத்துவக் காப்பீடு உள்ளிட்டு வேறு எவ்வித சலுகைகளும் இவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. கடந்த வருடம் இவர்களுக்கு தீபாவளி போனஸாக ரூ.1000 மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அதுவும் தீபாவளி முடிந்து பின் வழங்கப்பட்டுள்ளது. 

இந்த வருடத்திற்கான தீபாவளி போனஸ் குறித்து இன்னும் பேசப்படவில்லை. எனவே, ஒப்பந்த துப்புரவு பணியாளர்களுக்கு இந்த வருடம் இரண்டு மாத ஊதியம் போனஸாக வழங்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு இதற்கு தீர்வு காண வேண்டும் என்றார். 

இதனிடையே, ஆட்சியர் அலுவலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் திடீரென திரண்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

பர்மிட் தாமதம், கட்டண குழப்பம்: அமைச்சர் மீது ஆம்னி உரிமையாளர்கள் சாடல்

ஆம்னி பேருந்து அதிக கட்டண வசூல் குற்றச்சாட்டு தொடர்பாக அமைச்சர் இன்றுவரை பேச்சுவார்த்தை நடத்தவில்லை என உரிமையாளர் சங்கம்...

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...