மாநகராட்சிப் பள்ளியில் தூய்மை இந்தியா திட்டம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

தூய்மை இந்தியா, தூய்மை வித்யாலயா-வின் சுகாதாரமாக வாழ்வது குறித்தான விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை ரத்தினபுரியில் அமைந்துள்ள மாநகராட்சிப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர்களிடையே சுத்தம் குறித்தான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதனை கோவை மாநகராட்சி ஆணையர் விஜயகார்திகேயன் துவக்கி வைத்தார்.



தூய்மை இந்தியா, தூய்மை வித்யாலயா அறக்கட்டளை, கோவை ரோட்டரி கிளப், ஏஆர்சி பவுண்டேஸன் ஆகியவை இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சியில், ஏஆர்சி பவுண்டேஸனின் சார்பில் அதன் உறுப்பினர்கள் மைம்ஸ் (அமைதியான) முறையில் சுகாதாரம் தொடர்பான நாடகம் நடத்தி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



இதனைத்தொடர்ந்து விஜயகார்த்திகேயன் பேசியதாவது:-

சுத்தம், சுகாதாரத்தின் அடிப்படை மாணவர்களிடம் இருந்து தொடங்க வேண்டும். சாப்பிடும் முன் கையினை சுத்தம் செய்வது, சுற்றுப்புரத்தை சுத்தமானதாக வைத்துக்கொள்வது போன்றவற்றை மாணவர்கள் பின்பற்ற வேண்டும் என்றார்.



தூய்மை இந்தியா, தூய்மை வித்யாலயா-வின் கோவை மாவட்ட தலைவர் திருமாள் பேசியதாவது:-

திறந்த வெளி கழிப்பிடத்தினை தவிர்க்க வேண்டும். நமது சுற்றுப்புரத்தை நாம் தான் பாதுகாப்பாக வைக்க வேண்டும். எங்கு நாம் இருக்கிறோமோ அங்கு சுகாதாரம் இருக்க வேண்டும். அடிப்படை சுகாதாரம் மாணவர்களிடையே இருப்பது அவசியம், மற்றவர்களுக்கும் இதுகுறித்து மாணவர்கள் தான் எடுத்துரைக்க வேண்டும் என்றார்.

இந்நிகழ்ச்சி 82 மாநகாட்சிப் பள்ளிகளில் நடத்தப்பட உள்ளதாக அவ்வமைப்பினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.







Newsletter

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...

Truck Carrying Illegal Gravel Seized on L&T Bypass in Coimbatore

Officials from the Department of Geology and Mining in Coimbatore seized a tipper lorry carrying around three units of g...