சென்ட்ரல், கோயம்பேடுக்கு வெடிகுண்டு மிரட்டல்


சென்னை: சென்னை மாநகர காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று இரவு 8.13 மணியளவில் மொபைல் நம்பர் ஒன்றில் இருந்து ஒரு எஸ்எம்எஸ் தகவல் கிடைத்தது. அதில், போலீஸ் பிடித்து வைத்திருக்கும் ஐஎஸ்எஸ்எஸ் சம்பந்தப்பட்ட நபர்களை அடுத்த 42 மணி நேரத்திற்குள் விடுதலை செய்ய வேண்டும். இல்லை என்றால் சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள், மற்றும் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இரவுக்குள் குண்டு வெடிக்கும் என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த எஸ்எம்எஸ் தமிழில் வந்துள்ளது. 2 முறை இந்த எஸ்எம்எஸ் வந்தது. சென்ட்ரல், எழும்பூர் ரயில்வே ஸ்டேசன், கோயம்பேடு மார்க்கெட் பகுதிகளுக்கு வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.

ரயில்வே ஸ்டேசனின் அனைத்து நடைமேடை, சரக்கு பெட்டக அறை உட்பட எல்லா பகுதிகளும் துப்புரவாக ஆய்வு செய்யப்பட்டது. சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் நடந்த சோதனையின் முடிவில், எஸ்எம்எஸ்ஸில் வந்த வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரிய வந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, வெடிகுண்டு மிரட்டல் வந்த மொபைல் எண் யாருடையது, எந்த முகவரியில் இருந்து அனுப்பப்பட்டது என்பது தொடர்பாக விசாரிக்கின்றனர்.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...