பட்டாசு கடைகள் வணிகவரித்துறையில் பதிவு செய்வது கட்டாயம்

தீபாவளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் தற்காலிக பட்டாசுக் கடைகள் அமைக்கும் வணிகர்கள் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்து வணிகவரி ஆணைய கூடுதல் தலைமைச் செயலாளர் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளளதாவது:-

''ஒவ்வொரு வருடமும் வணிகர்கள் பல்வேறு இடங்களில் இருந்தும் பட்டாசுகளை கொள்முதல் செய்து தற்காலிக கடைகள் அமைத்து சில்லரை விற்பனை செய்வது வழக்கம். இவ்வாறு தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்கும் வணிகர்கள் தமிழ்நாடு மதிப்புக்கூட்டு வரிச்சட்டத்தின் அடிப்படையில் வணிகவரித் துறையில் பதிவு எண் பெற்ற பிறகே கொள்முதல் மற்றும் விற்பனை செய்ய வேண்டும். 

அனைத்து பட்டாசு வணிகர்களும் தங்களது கொள்முதலுக்கான பட்டியல்கள் பெற்றிருக்க வேண்டும். மேலும் வணிகர்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு விற்கப்படும் பட்டாசுகளுக்கு பட்டியல்கள் வழங்க வேண்டும். கொள்முதல் மற்றும் விற்பனை குறித்த விபரங்களை தங்களது விற்பனை இடம் அமைந்துள்ள எல்லைக்குட்பட்ட  வரிவிதிப்பு வட்டத்தில் தாக்கல் செய்து அதற்குண்டான வரியைச் செலுத்த வேண்டும். 

வணிகர்களின் நலன்கருதி தற்காலிகமாக பதிவுச்சான்று பெற ஒவ்வொரு மாவட்ட தலைமை அலுவலகங்களிலும் உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனை பயன்படுத்தி தற்காலிக பட்டாசு விற்பனை செய்யும் வணிகர்கள் உதவிமையங்களை அணுகி நேரடியாக விண்ணப்பம் செய்து பதிவுச் சான்று பெற்றுக்கொள்ள வேண்டும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...

Truck Carrying Illegal Gravel Seized on L&T Bypass in Coimbatore

Officials from the Department of Geology and Mining in Coimbatore seized a tipper lorry carrying around three units of g...