காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பாராளுமன்ற ஒப்புதல் தேவையில்லை- தமிழ்நாடு மூத்த பொறியாளர்கள் சங்கம்

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் அடிப்படையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படலாம் எனவும் இதற்கு பாராளுமன்றத்தின் ஒப்புதல் பெற தேவையில்லை எனவும் தமிழ்நாடு மூத்த பொறியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கோவையில் தமிழ்நாடு மூத்த பொறியாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

பன்மாநில நதிநீர் வழக்கு சட்டம் 1956 உட்பிரிவு 6 ன்படி காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டுள்ளது. அதே சட்டத்தின் உட்பிரிவுகள் 6 ஏ (1) மற்றும் 6 (2)- யின்படி பாராளுமன்றத்தின் மேற்பார்வைக்கு அனுப்பப்படாமலேயே காவிரி மேலாண்மை  வாரியம் அமைக்கப்படலாம். இதற்கு முன்னுதாரணங்களாக நர்மதா நதி கட்டுப்பாட்டு ஆணையம் மற்றும் கிருஷ்ணா - கோதாவரி நதிகளின் மேலாண்மை வாரியங்கள் பாராளுமன்ற ஒப்புதலின்றி அமைக்கப்பட்டுள்ளது ஆகும். எனவே காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசுக்கு முழு உரிமை உண்டு. பி.ஏ.பி வாய்க்கால் திட்டத்தில் எழும் விவகாரங்களை இரு மாநில அதிகாரிகள் மட்டத்திலேயே தீர்க்கப்பட்டு வருவதை அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.

இந்த விவகாரத்தில் மத்திய அரசு தமிழகத்திற்கு ஓரவஞ்சனையுடன் செயல்பட்டு வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்த தமிழக அரசுக்கு முழு உரிமை உண்டு என தெரிவித்தனர்.

Newsletter

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...