ரியல் எஸ்டேட் தொழிலுக்கு இடைக்கால தடை உத்தரவை நீக்கக்கோரிக்கை

கோவையில் அகில இந்திய ரியல் எஸ்டேட் வர்த்தகர்கள் மற்றும் முகவர்கள் நலசங்கம் கூட்டமைப்பு சார்பாக ஆலோசனை கூட்டம் இன்று சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் தி௫மண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டம் கூட்டமைப்பின் தேசிய தலைவர் ஹென்றி தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், கடந்த மாதம் 9-9-2016ம் தேதி அன்று சென்னை உயர்நீதிமன்றம், பட்டா மனைகளையும் அங்கிகாரம் பெறாமல் கட்டியுள்ள வீடு மற்றும் வீட்டுமனைப் பிரிவுகளையும் இனிமேல் பதிவுசெய்ய இடைக்கால தடை உத்தரவு பிறபித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள இந்த உத்தரவினால் தமிழ்நாட்டில் ரியல் எஸ்டேட் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்த கூட்டத்தில் முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது.

இதுகுறித்து, அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தேசிய தலைவர் ஹென்றி பேசும்பொழுது:- உயர்நீதிமன்றம் உத்தரவினால் ரியல் எஸ்டேட் தொழில் முடங்கி கிடப்பதுடன் இத்தொழிலை நம்பியுள்ள இலட்சக்கணக்கான முகவர்கள் வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது. பத்திரப்பதிவு துறைக்கு ஆண்டுக்கு 8ஆயிரத்து 500கோடி வ௫வாய் ஈட்டித் த௫வதும் இதன் மூலம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இடைக்கால தடை உத்தரவை நீக்கக்கோரி தமிழக அரசு சட்டரீதியான நடவடிக்கை மேற்க்கொள்ள வேண்டும் என அரசை கேட்டுக்கொள்கிறேன் என கூறினார்.

இதில், மேற்கு மண்டல தலைவர் நேரு நகர் நந்து மற்றும் ஒ௫ங்கிணைப்பாளர் செந்தில்குமார் உள்ளிட்ட மாநில முழுவதும் உள்ள ரியல் எஸ்டேட் வர்த்தகர்கள் மற்றும் முகவர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Newsletter

Dengue Cases Declining in Coimbatore, Prevention Measures Intensified: Minister Arunraj

Health Minister K.G. Arunraj said dengue cases in Coimbatore have declined compared to last year, with preventive measur...

முதல்வர் விஜய்யின் பேச்சை கண்டித்து கோவையில் திமுக கண்டன ஆர்ப்பாட்டம்

முதல்வர் விஜய்யின் சட்டப்பேரவை பேச்சைக் கண்டித்து, செப். 12-ம் தேதி ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக சார்பில் செஞ்சிலுவை ச...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 புதிய மாணவர்களுக்கான வரவேற்பு விழா

கோவை ஒத்தக்கல்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 27-வது Batch முதலாமாண்டு மாணவர்களுக்கான YUVA 2026 Freshmen...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் பொறியாளர் தினம் கொண்டாட்டம்

துடியலூர் அருகே வட்டமலை பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் பொறியாளர் தினம் சிறப்பாக கடைப்பிடிக்க...

கோவை நீதிமன்ற வளாகத்தில் கைகலப்பு; போலீசார் விசாரணை

கோவை நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வழக்கறிஞரின் காரின் நான்கு டயர்களிலும் காற்றை இறக்கியதாக கூறப்படும் விவகாரத...

கோவை காவல்துறை கான்ஸ்டபிள் மாநில போட்டியில் தங்கத்துக்குப் பின் வெண்கலம் வென்றார்

கோவை நகர காவல்துறை வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அகற்றும் படையைச் சேர்ந்த காவல் கான்ஸ்டபிள் M. விஜய், செப்டம்பர் 10ஆம் தே...