பிரம்மாண்ட கிரிக்கெட் திருவிழா- சி.சி.எல் டி.20.


"எர்த் 2 மார்ஸ்" என்ற தனியார் நிறுவனம் தமிழக அளவில், கல்லூரிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டிகளை நடத்த உள்ளது.

தமிழகம் முழுவதுமாக மொத்தம் 8 மண்டலங்களில் இருந்து 16 கல்லூரி அணிகள் 'சி.சி.எல். டி.20' விளையாட்டுப்போட்டியில் விளையாட உள்ளன. இதன் முதற்கட்டமாக, கோவை மண்டலத்தை சேர்ந்த 34 கல்லூரிகள் தங்கள் அணிகளை போட்டிக்கு பதிவு செய்துள்ளனர். இவர்களில் இருந்து 2 அணிகள் தேர்வு செய்யப்பட்டு, இறுதிப்போட்டியில் பங்கேற்கின்றனர். இந்த தகுதிச்சுற்று போட்டி வரும் நவம்பர் மாதம் 2வது வாரம் தொடங்க உள்ளது.

கோவை மண்டலத்திற்கான போட்டிகள் பி.எஸ்.ஜி கலை கல்லூரி மைதானத்தில் நடக்க உள்ளது. இந்த போட்டிகளுக்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு திருச்சி சாலையில் உள்ள ரேடியோ மெர்ச்சி அலுவலகத்தில் நடை பெற்றது. இதில், ரேடியோ மெர்ச்சி பண்பலையின் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் அஜித் கிருஷ்ணா, சிம்ப்ளிசிட்டி செயலியின் முதன்மை தலைமை அதிகாரி ஆண்ட்ரு சாம் மற்றும் விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.





தொடந்து பி.எஸ்.ஜி. கிரிக்கெட் அணியின் தலைவர் தினேஷ் இது குறித்து கூறுகையில், 'எங்கள் போன்ற மாணவர்களுக்கு, இது ஒரு சிறந்த அடித்தளம். இந்த விளையாட்டு போட்டியில் பங்கேற்க ஆர்வமாக உள்ளோம். கல்லூரியில் நடக்கும் தேர்வு பாதிக்காத வகையில் போட்டிகளை நடத்த உள்ளது மிகுந்த மகழ்ச்சியாக உள்ளது' என்றார்.



"சி.சி.எல். டி.20" போட்டியில் உங்கள் கல்லூரி கிரிக்கெட் அணியை இணைத்துக்கொள்ள: 9629441991 என்ற தொலை பேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...