கல்லூரி அருகே கஞ்சா விற்றவர்கள் கைது

கோவை, ஈச்சனாரி மேம்பாலம் அருகில் கஞ்சா விற்கப்படுவதாக போத்தனூர் காவல் நிலையத்திற்கு செவ்வாயன்று தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில், காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, அப்பகுதியில் உள்ள கல்லூரியின் அருகில் சந்தேகத்திற்குறிய வகையில் நின்றுகொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், விற்பணைக்காக அவர் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து, அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் அந்த வாலிபர் மதுக்கரைப் பகுதியைச் சேர்ந்த அத்துல்லா என்பவரது மகன் அபுதாகிர் (30) என்பது  தெரியவந்தது. அவரிடம் இருந்து கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்யப்பட இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்த காவல் துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதனிடையே, கோவை சிட்கோவை அடுத்த பிள்ளையார்புர பேருந்து நிலையம் அருகில் வாலிபர் ஒருவர் கஞ்சா விற்பதாக போத்தனூர் காவல் துறையினருக்கு தகவல் வந்ததையடுத்து, அப்பகுதிக்கு விரைந்த காவல் துறையினர் அங்கு இருந்த பிள்ளையார் புரத்தைச் சேர்ந்த சேக் பரிதி என்ற வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, அவர் கஞ்சா வைத்திருந்ததைத் தொடர்ந்து அவரைக் கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.

கோவை, போத்தனூர் பகுதியில் நேற்று ஒரே நாளில் 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 புதிய மாணவர்களுக்கான வரவேற்பு விழா

கோவை ஒத்தக்கல்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 27-வது Batch முதலாமாண்டு மாணவர்களுக்கான YUVA 2026 Freshmen...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் பொறியாளர் தினம் கொண்டாட்டம்

துடியலூர் அருகே வட்டமலை பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் பொறியாளர் தினம் சிறப்பாக கடைப்பிடிக்க...

கோவை நீதிமன்ற வளாகத்தில் கைகலப்பு; போலீசார் விசாரணை

கோவை நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வழக்கறிஞரின் காரின் நான்கு டயர்களிலும் காற்றை இறக்கியதாக கூறப்படும் விவகாரத...

கோவை காவல்துறை கான்ஸ்டபிள் மாநில போட்டியில் தங்கத்துக்குப் பின் வெண்கலம் வென்றார்

கோவை நகர காவல்துறை வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அகற்றும் படையைச் சேர்ந்த காவல் கான்ஸ்டபிள் M. விஜய், செப்டம்பர் 10ஆம் தே...

Coimbatore Police Constable Adds Bronze After Gold at State-Level Competition

Police Constable M. Vijay of the Coimbatore City Police Bomb Detection and Disposal Squad (BDDS), who won gold in the Ro...

வால்பாறையில் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது குருபூஜை; அனைத்துக் கட்சியினரும் மலரஞ்சலி

வால்பாறையில் சுதந்திரப் போராட்டத் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது குருபூஜை விழா கோலாகலமாக நடைபெற்றது. அனைத்துக் கட்சி...