தேசவிரோத செயல்களில் ஈடுபட்ட 12 அரசு ஊழியர்கள் நீக்கம்

தீவிரவாதி புர்கான் வானி கொல்லப்பட்டதையடுத்து காஷ்மீர் பள்ளத்தாக்கில் 100 நாட்களுக்கும் மேலாக அமைதியற்ற சூழ்நிலை நிலவுகிறது. இந்த சூழ்நிலையை மேலும் மோசமாக்கும் வகையில் அரசு ஊழியர்கள் சிலர் இளைஞர்களிடையே வன்முறையைத் தூண்டுவதாகவும், தேசவிரோத செயல்களில் ஈடுபடுவதாகவும் புகார் கூறப்பட்டது.

இதையடுத்து புலனாய்வுப் பிரிவினர் தீவிரமாக கண்காணித்து அரசுக்கு எதிரான செயல்களில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அடங்கிய கோப்புகளை தயாரித்து அரசுக்கு அனுப்பியது. அதில் 36 அரசு ஊழியர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டிருந்தன

இந்த கோப்புகளை ஆய்வு செய்த அரசு, 12 ஊழியர்களை பணியில் இருந்து நீக்கியுள்ளது. நீக்கப்பட்ட ஊழியர்கள் வருவாய், பொது சுகாதார பொறியியல், ஊரக வளர்ச்சி, கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் என மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

‘ஜம்மு-காஷ்மீர் அரசியலமைப்பு சட்டத்தின் 126-வது பிரிவின்படி இவர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் பொது பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலர் ஜாமீனில் வந்துள்ளனர். சிலர் கைது நடவடிக்கையை தவிர்த்து வருகின்றனர்’ என்றும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.

இதேபோல் கடந்த 1990ம் ஆண்டு தேச விரோத செயல்களில் ஈடுபட்டதாக கல்வி அமைச்சர் உள்ளிட்ட 5 அரசு ஊழியர்கள் நீக்கப்பட்டனர். பின்னர் ஊழியர்கள் கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து அவர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை காவல்துறை கான்ஸ்டபிள் மாநில போட்டியில் தங்கத்துக்குப் பின் வெண்கலம் வென்றார்

கோவை நகர காவல்துறை வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அகற்றும் படையைச் சேர்ந்த காவல் கான்ஸ்டபிள் M. விஜய், செப்டம்பர் 10ஆம் தே...

Coimbatore Police Constable Adds Bronze After Gold at State-Level Competition

Police Constable M. Vijay of the Coimbatore City Police Bomb Detection and Disposal Squad (BDDS), who won gold in the Ro...

வால்பாறையில் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது குருபூஜை; அனைத்துக் கட்சியினரும் மலரஞ்சலி

வால்பாறையில் சுதந்திரப் போராட்டத் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது குருபூஜை விழா கோலாகலமாக நடைபெற்றது. அனைத்துக் கட்சி...

கோவையில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அமைச்சர் வே சம்பத்குமார் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நடைபெற்று வரும் சாலை பணிகள், நமக்கு நாமே திட்டம், அம்ருத் திட்டப் பணிகள் ஆகியவற்றை பிற்படுத...

கோவையில் விபத்தில் மூளைச்சாவடைந்த நபரின் உறுப்புகள் தானம்: 3 பேருக்கு மறுவாழ்வு

கோவையில் துடியலூர் அருகே இருசக்கர வாகன விபத்தில் மூளைச்சாவடைந்த 51 வயது நபரின் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் அவரது குடு...

கோவையில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 நடைமுறைப்படுத்தல் குறித்த கலந்தாய்வுக் கூட்டம்

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தலைமையில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 நடைமுறைப்படுத்தல் குறித்த கலந்தாய்வுக்...