பஞ்சப்படி வழங்க வேண்டும் என துப்புறவு மற்றும் சுமைத்தூக்கும் பணியாளர்கள் வேலை நிறுத்தம்

கோவையில் உள்ள நுகர்வோர் வாணிப கழகத்தில் பணியாற்றும் சுமைத்தூக்கும் பணியாளர்கள் மற்றும் துப்புறவு பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்ததில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகம் முழுவதும் உள்ள அரிசு நுகர்வோர் வாணிப கழகம் மற்றும் நவீன அரிசி ஆலைகளில் மொத்தம் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த பணியாளர்களுக்கு பஞ்சப்படி வழங்க வேண்டும் என கடந்த 2009 ஆம் ஆண்டு தமிழக அரசு உத்தரவிட்டது, அதே போல் குறைந்தபட்ச கூலி சட்டத்தை நடைமுறை படுத்தியது. ஆனால் இது வரை அவர்களுக்கான பஞ்சப்படி, குறைந்தபட்ச ஊதியம் கொடுப்பதில்லை, அதே போல் கிடங்குகளுக்கு அனுப்பும் பொருட்களின் அளவுகளில் அதிகாரிகள் குளறுபடி செய்வதால் கோவை மாவட்டம் பூசாரி பாளையத்தில் உள்ள நான்கு யூனிட்டுகளுக்கும் சரியான அளவில் பொருட்கள் செல்வதில்லை இதனால் சுமை தூக்கும் பணியாளர்கள் கடுமையாக பாதிக்கபடுவதாக கோவை மாவட்ட சுமை தூக்கும் பணியாளர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

அதே போல் இங்கு பணியாற்றும் துப்புறவு பணியாளர்களுக்கும் மாதம் 100 ரூபாய் மட்டும் பஞ்சப்படி வழங்கப்படுகிறது. மாத ஊதியமும் 30 ஆண்டுகளாக பணியாற்றிவருபர்களுக்கும் 1500 ரூபாய் அளவிற்கே ஊதியம் வாங்கி வரும் அவலம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். உடனடியாக இவர்களது கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பூசாரி பாளையம் பகுதியில் உள்ள நுகர்வோர் வாணிப கழகத்தில் உள்ள சுமைத்தூக்கும் பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அரசு இதே மெத்தனப்போக்கை கடைப்பிடித்தால் தொடர் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அறிவித்துள்ளனர். குறிப்பாக இன்று நாள் முழுவதும் ரேசன் கடைகளுக்கு முறையாக பொருட்கள் அனுப்பப்படவில்லை ஆனால் இது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் யாரும் இது குறித்து கண்டுகொள்ளவில்லை என குற்றம் சாட்டினர்.    

Newsletter

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 புதிய மாணவர்களுக்கான வரவேற்பு விழா

கோவை ஒத்தக்கல்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 27-வது Batch முதலாமாண்டு மாணவர்களுக்கான YUVA 2026 Freshmen...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் பொறியாளர் தினம் கொண்டாட்டம்

துடியலூர் அருகே வட்டமலை பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் பொறியாளர் தினம் சிறப்பாக கடைப்பிடிக்க...

கோவை நீதிமன்ற வளாகத்தில் கைகலப்பு; போலீசார் விசாரணை

கோவை நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வழக்கறிஞரின் காரின் நான்கு டயர்களிலும் காற்றை இறக்கியதாக கூறப்படும் விவகாரத...

கோவை காவல்துறை கான்ஸ்டபிள் மாநில போட்டியில் தங்கத்துக்குப் பின் வெண்கலம் வென்றார்

கோவை நகர காவல்துறை வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அகற்றும் படையைச் சேர்ந்த காவல் கான்ஸ்டபிள் M. விஜய், செப்டம்பர் 10ஆம் தே...

Coimbatore Police Constable Adds Bronze After Gold at State-Level Competition

Police Constable M. Vijay of the Coimbatore City Police Bomb Detection and Disposal Squad (BDDS), who won gold in the Ro...

வால்பாறையில் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது குருபூஜை; அனைத்துக் கட்சியினரும் மலரஞ்சலி

வால்பாறையில் சுதந்திரப் போராட்டத் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது குருபூஜை விழா கோலாகலமாக நடைபெற்றது. அனைத்துக் கட்சி...