மாணவர்கள் சாதனை புரிந்து தொழில் முனைவராக திகழ வேண்டும்- துணை வேந்தர் மணியன்

சர்தார் வல்லபாய் பட்டேல் பன்னாட்டு ஜவுளி மற்றும் மேலாண்மை கல்லூரியில் 8வது பட்டமளிப்பு விழா அக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவில் 61 மாணவர்களுக்கு பட்டங்களும், முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு விருது மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் மணியன் கலந்து கொண்டார். 



அவர் பேசுகையில்:- இந்திய ஜவுளித்துறையில் உள்ள வாய்ப்புகள் மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அத்துறையின் பங்களிப்பு முக்கியமானதாகும். மாணவர்கள் இந்நாள் அவர்களது பெருமிதமிக்க நாளாகும். இதற்காக பாடுபட்ட பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களை மாணவர்கள் நன்றி தெரிவித்து பாராட்ட வேண்டும். மாணவர்களின் பங்கு மூலம் உலக அரங்கில் பொருளாதாரம் உயர்ந்து நிற்கவும், நாடு முன்னேறவும் பாடுபட வேண்டும். தற்போதைய ஜவுளித் துறையில் பங்களிப்பு 14 சதவீதம் உற்பத்தி அளவில் உள்ளது. நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் அது முக்கிய பங்கு அளிக்கிறது. இத்துறை 3.5 கோடி மக்களுக்கு நேரடி வேலை வாய்ப்பு உள்ளது. உலக அளவில் சாதனை புரிய பல மாணவர்களை இக்கல்லூரி  உருவாக்குகிறது. அத்துடன் நம்மிடம் உள்ள தொழில்நுட்பத்தின் உதவியின் மூலம் பல சாதனைகளை புரிந்து தொழில் முனைவராக திகழ வேண்டும். மாணவர்களிடத்தில் உள்ள திறமையை ஊக்குவித்து அவர்களை நல்ல குடிமக்களாக திகழ வைக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

இவ்விழாவில், தென் இந்தியாவில் ஜவுளி ஆராய்ச்சி கழக இயக்குநர் பிரகாஷ் வாசுதேவன், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜா எம். சண்முகம், திருப்பூர் பாயிண்ட் நிட் ஏற்றுமதி நிர்வாக இயக்குநர் பாயிண்ட் மணி, கல்லூரி இயக்குநர் ரமேஷ்குமார், டீன் பெருமாள்சாமி, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...