எஸ்.என்.ஆர் கல்லூரியில் பேராசிரியர்களுக்கான பயிற்சிப்பட்டறை

கோயமுத்தூர், எஸ்.என்.ஆர் சன்ஸ் கல்லூரியில் IQAC சார்பில் "கல்வி மற்றும் நிர்வாகத் தரமேம்பாட்டுத் தணிக்கையின் சிக்கல்களும் சாவல்களும்" என்ற தலைப்பிலான இரண்டு நாள் பயிற்சிப்பட்டறை தேசிய தர மதிப்பீட்டு குழுவின் நிதிநல்கையின் கீழ் 21.10.2016 மற்றும் 22.10.16 ஆகிய நாட்களில் நடைபெற்றது. 

இந்நிகழ்வை எஸ்.என்.ஆர். சன்ஸ் கல்லூரியின் முதல்வர் கருணாகரன் தலைமை ஏற்க, கோவை என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் முத்துசாமி தொடங்கிவைத்து உரையாற்றினார். காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழக வேதியியல் துறைத் தலைவர் மற்றும் IQAC இயக்குநர் சேதுராமன் சிறப்புரை நல்கினார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற அமர்வுகளில் தமிழகத்தின் பல்வேறு பல்கலைக் கழகங்களைச் சார்ந்த துறைசார் வல்லுநர்கள் பயன்பெறும் வகையிலான கருத்துக்களையும் பயிற்சியையும் வழங்கினர். 

இந்நிகழ்ச்சியில், கோவை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கல்லூரிகளிலிருந்து பல்வேறு துறைப் பேராசிரியர்கள், எஸ்.என்.ஆர். கல்லூரி பேராசிரியர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றுப் பயன்பெற்றனர். இந்நிகழ்வினை எஸ்.என்.ஆர். சன்ஸ் கல்லூரியின் உயிர்தொழில்நுட்பவியல் துறைத்தலைவர் மற்றும் IQAC ஒருங்கிணைப்பாளர் ரவிக்குமார் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தார்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...