முதல்வர் குணமடைய வடஇந்தியர்கள் சிறப்பு வழிபாடு


தமிழக முதல்வர் விரைவில் குணமடைய வேண்டி கோவையில் வடஇந்திய சமாஜ் அமைப்பினர் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட உள்ளனர்.

தமிழக முதல்வர் உடல் நலக் குறைவின் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில் குணமடைய வேண்டி பல்வேறு அரசியல் கட்சியினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதிமுக, உறுப்பினர்களும், தொண்டர்களும் ஆங்காங்கே பல்வேறு விதமான வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள சேவா ஆசிரமத்தில் வடஇந்தியர் சமாஜ் அமைப்பினர், முதல்வர் ஜெயலலிதா குணமடைய வேண்டி ஞாயிறன்று (இன்று) சிறப்பு பிரார்த்தனை நடத்த உள்ளனர். இதுகுறித்து நம் நிருபரிடம் அந்த அமைப்பின் தலைவர் சரவன் போத்ரா கூறுகையில்,

''முதல்வர் குணமடைய வேண்டி இன்று புனித பிரார்த்தனை, மகாருத்ரா அபிஷேகம், மகா மிருத்துஞ்சேயா ஹோமம் உள்ளிட்ட சிறப்பு பிரார்த்தனைகளும், அன்னதானமும் வழங்க திட்டமிட்டுள்ளோம். இதில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி, அதிமுக உறுப்பினர் அம்மன் கே.அர்ஜூனன், அமைச்சர் நாகராஜ், பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சித் தலைவர் பி.ஆர்.ஜி. அருண் குமார் ஆகியோர் பங்கேற்று வழிபாட்டில் ஈடுபட உள்ளனர். 

மேலும் இதில், கோவையில் உள்ள வட இந்தியர்கள், அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அதிகளவில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது'' என தெரிவித்தார்.

Newsletter

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...