தித்திக்கும் தீபாவளியை திகட்டாமல் கொண்டாடலாம்..!


தீபாவளி என்றாலே நினைவுக்கு வருவது பட்டாசுகளும், பட்டாடைகளும், பலகாரங்களும், கொண்டாட்டங்களும் தான். அந்தவகையில் தான் இந்த தீபாவளியை அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். தீபாவளிக்கு முன்னதாக 2 நாட்களும், பண்டிகை முடிந்த பின் 2 நாட்களும் கொண்டாடிய காலங்கள் கழிந்து, தற்போது ஒரே நாளில் தீபாவளியை கொண்டாடி வருகிறோம். ஒரு நாள் தான் பண்டிகை என்ற போதிலும் கொண்டாட்டங்களுக்கு குறைவில்லாத நகராக நமது கோவை மாநகரம் உள்ளது. மற்ற நகரங்கள் போல அல்லாமல் கோவையில் தங்கி வேலை செய்யும் மக்கள் இங்குள்ளவர்களின் அரவணைப்பாலும், பண்பான பேச்சாலும் கோவையிலேயே தங்கி தீபாவளியை கொண்டாடி வருவது தனிச்சிறப்பு.





தற்போது பொதுமக்கள் அனைவரும் வர்த்தக இடங்களில் கூடி புத்தாடைகள் வாங்கி வருகின்றனர். உக்கடம், டவுன்ஹால், காந்திபுரம், ஆர்.எஸ்.புரம், சிங்காநல்லூர் போன்ற கோவையின் முக்கிய பகுதிகள் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகின்றன. குறிப்பாக, டவுன்ஹால் பகுதியில் வழக்கத்துக்கு அதிகமாக கூட்டநெரிசல் ஏற்பட்டுள்ளது.



இதனால் ஏற்படும் அசம்பாவிதங்களை தடுக்க அப்பகுதியில் அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பொருட்கள் வாங்க வரும் மக்கள் தங்களுடன் குழந்தைகளையும் அழைத்து வருகின்றனர். சாலைகளில் விளையாடிக் கொண்டே வரும் சிறுவர், சிறுமியர் பெற்றோரை விட்டு பிரிந்து செல்லும் நிலை ஏற்படலாம். இந்த நிலை ஏற்பட்டால் காவல் துறைக்கு 9444991919 இந்த எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டும். அல்லது அந்தந்த பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள காவல்துறை கோபுரங்களுக்கு சென்று புகார் அளிக்க வேண்டும் என்றும் காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





திகட்டாத தீபாவளி:

தீபாவளி பண்டிகையின் போது வெளிப்படும் மகிழ்ச்சி சற்றும் குறைவில்லாமல் இருக்க கோவை மாவட்ட தீயணைப்புத் துறையினர் சார்பில் பல்வேறு பாதுகாப்பு வழிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவை பின்னவருமாறு:-

  • பெரியவர்களின் மேற்பார்வையிலேயே குழந்தைகள் பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.
  • பட்டாசுகளை கொளுத்தும் போது இறுக்கமான பருத்தி ஆடைகளை அணியலாம்.
  • ராக்கெட் போன்ற பட்டாசுகளை குடிசைகள் இல்லாத, திறந்த வெளிப்பகுதிகளில் வெடித்து மகிழலாம்.
  • சட்டைப்பைகளில் பட்டாசுகளை வைத்திருக்க வேண்டாம். 
  • நீளமான வர்த்திகளைக் கொண்டு பட்டாசுகளை கொளுத்தலாம். 
  • தீப்புண் ஏற்பட்டால், பேனா மை, மற்றும் இதர பொருட்களை உபயோகிக்காமல் மருத்துவரை அணுகலாம். 
  • இரவு 10 மணிக்குமேல் பட்டாசுகள் வெடிக்கக் கூடாது. 
  • வெடிக்காத பட்டாசுகளை கையில் எடுக்க வேண்டாம். 
  • மருத்துவமனை, பெட்ரோல் பங்க், மளிகை கடை, பட்டாசுக்கடை போன்றவைகள் இருக்கும் இடங்களில் பட்டாசுகளை வெடிக்க வேண்டாம்.




இந்த பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி, பாதுகாப்பான முறையில் தீபாவளியை கொண்டாடுவோம். கொண்டாட்டங்கள் ஒருபுறம் இருக்க, குழந்தைகளின் பாதுகாப்பில் பெற்றோர்கள் தனிக்கவனம் செலுத்தவேண்டிய தருணம் இது.

அனைவருக்கும் தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

Newsletter

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...