அழிந்துவரும் நாரைகள்- பாதுகாக்க முன்வருவோம்

அழிந்து வரும் பட்டியலில் இடம் பிடித்துள்ள பறவை இனங்களில் ஒன்று தான் ''ஃபிளமிங்கோ'' என்னும் பறவை. தமிழில் நாரை, பூநாரை என்றழைக்கப்படும் இந்த பறவைகள் உலகில் மொத்தம் இரண்டு வகைகளிலேயே காணப்படுகிறது. மற்ற பறவை இனங்களில் இருந்து இதனை எழிதாக இனம்காண முடியும்.

பெரிய ஃபிளமிங்கோ மற்றும் சிறிய ஃபிளமிங்கோ என்ற இந்த பறவைகள் பெரும்பாலும் நீர் நிலைகள், சதுப்புக் காடுகளில் மட்டுமே காணப்படுகிறது. பெரிய நீர்நிலைகளில் உள்ள சிறிய வகை மீன் மற்றும் தண்ணீரில் உள்ள சில பூச்சி வகைகளை அது உணவாக உட்கொள்ளும்.

இந்த வகை பறவைகள் அதிகப்படியாக நீர்நிலையில் இருப்பதால் இது இளஞ்சிவப்பு நிறங்களில் இருப்பது சிறப்பாகும். பெரிய வகை பிளமிங்கோஸ் குளிர் காலத்தில் கடலோர சதுப்புநிலங்களுக்கு கூட்டமாக இடம்பெயர்கின்றன. சிறிய ஃபிளமிங்கோ பறவைகள் குறைந்த எண்ணிக்கையில் நம் சுற்றுப்புரத்திலேயே அதிகப்படியாக காணப்படுகிறது.

1940 ஆம் ஆண்டு கட்ச் டாக்டர் சலீம் அலி என்பவர் பெரிய ஃபிளமிங்கோ வகையினை கண்டறிந்தார். அதற்கு முன்பு, பிளமிங்கோஸ் ஆப்பிரிக்காவில் மட்டுமே இனப்பெருக்கம் செய்து வந்தன. 

தற்போது கோவை போன்ற பெரிய மாவட்டங்களிலும் இந்த வகை பறவைகள் காணப்படுகின்றன. கோவையில் உள்ள சில ஈரநிலங்களில் அது இரைதேடி வருகின்றன. கடந்த சில வருடங்களுக்கு முன்பு சிங்காநல்லூர் பகுதியில் உள்ள ஒரு ஏரியில் பிளமிங்கோஸ் பறவைகள் சுற்றிவந்துள்ளன.

தற்போது, மீண்டும் அந்த வகைப் பறவைகள் சிங்காநல்லூர் ஏரியில் இரைக்காக வந்துள்ளன. அப்பகுதியை கடந்து சென்ற சிலர் அதனைக் கண்டுள்ளனர். மீண்டும் அதனைக்காண சென்ற போது அப்பறவைகள் அங்கிருந்து மாயமாகியுள்ளன.

அழிந்து வரும் பறவைகள் பட்டியலில் உள்ள பிளமிங்கோஸ் போன்ற பறவைகளை பாதுகாப்பது நம் கடமையாகும். இரைதேடி வரும் அதற்கு எவ்வித இடையூறு செய்யாமலும், நீரினை மாசுபடுத்தாமலும் அதனை நாம் பாதுகாப்போம்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...