நியாய விலைக்கடைகளில் முறையாக பொருட்கள் வழங்கக்கோரி- மனு

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நியாய விலைக்கடைகளில் உணவுப் பொருட்கள் சரிவர விநியோகம் செய்யக்கோரி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.



கோவை மாவட்டத்தில் உள்ள நியாய விலைக்கடைகளில் துவரம் பருப்பு, உளுந்து பருப்பு, பாமாயில், சக்கரை, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் ஒரு மாதத்தில் எந்தத் தேதியிலும் கேட்டாலும் பொதுமக்களுக்கு கிடைப்பதில்லை. இத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் நியாய விலைக்கடைகளில் அனைத்து பொருட்களும் பொதுமக்களுக்கு முறையாக விநியோகம் செய்ய வேண்டும். என்று நாளிதழ்களிலும் மற்றும் ஊடகங்களில் தவறாமல் வெளிவருகிறது. ஆனால் நியாய விலைப்பொருட்கள் பொதுமக்களுக்கு கிடைப்பதில்லை. இது குறித்து அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்திற்கு புகார்கள் வந்துள்ளது. 

இது குறித்து அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத் தலைவர் கல்யாணசுந்தரம் பேசுகையில்:-
நியாயவிலைக் கடைகளில் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் பற்றாக்குறையாக இருந்து வருகிறது. பொதுமக்கள் 5 கட்டமாக நியாய விலைக்கடைகளில் திருப்பி அனுப்பப்படுகின்றனர். இதற்கான முறையான திட்டத்தை அரசு அமல்படுத்த வேண்டும். ரேஷன் கார்டுகளை பொதுமக்கள் அடையாள சான்றிதழாகத்தான் பயன்படுத்தி வருகின்றனர். டாஸ்மாக் கடைகளில் அனைத்தும் சரியான முறைகளில் நடைபெற்று வருகிறது. ஆனால் நியாய விலைக்கடைகள் அவ்வாறு சரியான முறையில் செயல்படுவதில்லை. இதற்கான உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளாவிட்டால், அடுத்த கட்டமாக ரேஷன் கார்டு திருப்பி ஒப்படைக்கும் முயற்சியில் ஈடுபடப்போவதாக அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...