தினத்தந்திக்கு வயது 75..! தமிழ்நாடுக்கு வயது 60..!

தினத்தந்தி தொடங்கப்பட்டு இன்று 75 ஆண்டுகளுடன் பவள விழா கொண்டாடப்படுகிறது. மேலும் தமிழ்நாடு மொழிவாரி மாநிலமாக உதயமாகி இன்று 60வது ஆண்டுகள் ஆகிறது.

தினத்தந்தி பவள விழா:-

1942ம் ஆண்டு நவம்பர் 1-ந்தேதி அமரர் சி.பா.ஆதித்தனார் அவர்களால் முதன் முதலாக மதுரை மாநகரில் தினத்தந்தி தொடங்கப்பட்டது. அன்று முதல், தமிழக மக்களின் வாழ்க்கையோடும் தமிழக வரலாற்றோடும் இரண்டறக்கலந்து விட்டது தினத்தந்தி. 'தந்தி' தொடங்கப்பட்டபோது, இரண்டாவது உலகப்போர் தீவிரமாக நடந்து கொண்டு இருந்தது. போர்ச்செய்திகளை வாசகர்களுக்கு உடனுக்குடன் வழங்கியது தந்தி. இந்தியாவிலும், அகில உலகிலும் அடுக்கடுக்காக எத்தனையோ வரலாற்று நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. வல்லரசு நாடுகளிலும், பிற நாடுகளிலும் பற்பல ஆட்சி மாற்றங்கள் நடந்தன. பல நாடுகள் சுதந்திரம் பெற்றன. இந்திய வரலாற்றிலும் பல திருப்பங்கள் ஏற்பட்டன.  நாள்தோறும் நடந்த வரலாற்று நிகழ்ச்சிகளை, தமிழ் மக்களுக்கு சுடச்சுட தினத்தந்தி வழங்கியது.

டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் அவர்களின் தலைமையில் இயங்கிய தினத்தந்தி தற்போது அவர் மகன் சி.பாலசுப்பிரமணிய ஆதித்தன் அவர்கள் தலைமையில் சென்னை, மதுரை, திண்டுக்கல், திருச்சி, திருப்பூர், தஞ்சை, திருநெல்வேலி, நாகர்கோவில், கோவை, சேலம், ஈரோடு, வேலூர், கடலூர், பாண்டிச்சேரி, பெங்களூர், மும்பை என 16 பதிப்புகளில் தினமும் 16,79,837 பிரதிகளை விநியோகம் செய்து வருகிறது. 



இந்த நடப்பு ஆண்டிலும் 1,07,362, பிரதிகள் உயர்ந்து, 75 வது வருடத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறது தினத் தந்தி!

தமிழ்நாடு மொழிவாரி மாநிலம்:-

மொழிவாரி மாநில அமைப்புகள், 1956 நவம்பர் 1ம் நாள் சட்டப்படி பிரிக்கப்பட்ட தனி மாநிலங்களாக அதிகாரம் பெற்றன. அதில் தமிழ்நாடு நவம்பர் 1ம் நாள் மொழிவாரி மாநிலம் பிரிந்து இன்றுடன் அறுபது ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. தமிழ்நாடு மொழிவாரி மாநிலங்களாக அமைய  காமராஜர், பெரியார், அண்ணா, ஜீவா, நேசமணி, சிலம்பு செல்வர், சங்கரலிங்கனார் போன்ற தலைவர்கள் பல போராட்டங்களில் ஈடுபட்டனர். இவர்கள் மூலம் தமிழ்நாடு மொழிவாரி மாநிலங்களில் தமிழ்நாடு தனி மாநிலமாகவும்,  ஆந்திரா தனி மாநிலமாகவும், கேரளா தனி மாநிலமாகவும், கர்நாடகா தனி மாநிலமாகவும் பிரிந்துள்ளது.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...