தெலுங்கானாவில் காதல் திருமணத்துக்கு தடை விதித்த கோயில்!

ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் காதலர் கோயில் என அழைக்கப்பட்ட லட்சுமி நரசிம்மர் கோயிலில் காதல் திருமணங்கள் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கானா மாநிலம் கரீம் நகர் மாவட்டத்தில் உள்ளது தாபலா லட்சுமி நரசிம்மர் கோயில். பிரசித்தி பெற்ற இந்த கோயிலில் திருமணம் செய்தால் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என்பது அந்த பகுதி மக்களின் நம்பிக்கை. இக்கோயிலுக்கு கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற பகுதிகளில் இருந்து காதல் ஜோடிகள் வந்து திருமணம் செய்வது வழக்கம். இக்கோயிலில் ஏராளமான திருமணங்களும் நடைபெற்றுள்ளன.

ஒரு திருமணத்துக்கு ரூ.5 ஆயிரம் கட்டணம். இதன் மூலமே கோயிலுக்கு அதிக வருமானம் கிடைக்கும். கடந்த ஓராண்டில் சுமார் 13 ஆயிரம் திருமணங்கள் நடைபெற்றுள்ளன. பெற்றோர் சம்மதம் இல்லாமல் காதல் திருமணம் செய்யும் ஜோடிகள் தங்கள் வயது சான்றிதழ் மட்டும் அளித்தாலே போதும். திருமணம் நடத்த கோயில் நிர்வாகம் அனுமதிக்கும். இதனால், இந்த கோயிலை 'காதலர் கோயில்' என்றே இப்பகுதி மக்கள் அழைத்து வந்தனர்.

இந்நிலையில், மக்கான்களி பகுதியில் தண்ணீர் சுத்திகரிப்பு ஆலையில் பணிபுரிந்து வரும் அனில் என்பவர், ஹஸ்தாபுரத்தை சேர்ந்த மவுனிகா என்ற 18 வயது பெண்ணை காதலித்து வந்தார். இதற்கு பெண்ணின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, கடந்த அக்டோபர் 19ம் தேதியன்று இந்த காதல் ஜோடி லட்சுமி நரசிம்மர் கோயிலுக்கு வந்தது. இதுகுறித்து தகவலறிந்த பெண்ணின் குடும்பத்தினர் கோவிலுக்குச் சென்று அணிலை கொடூரமாக கொலை செய்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து தற்போது அந்த கோயிலில் காதல் ஜோடிகள் திருமணம் செய்வதற்கு முழு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, கோயில் நிர்வாக கமிட்டி செயலாளர் வெங்கட் ரெட்டி கூறுகையில், ''இனிமேல் இந்த கோயிலில் காதல் திருமணங்கள் செய்ய அனுமதிக்க கூடாது என போலீசார் உத்தரவிட்டிருக்கிறார்கள். மேலும் அவர்களின் அறிவுறுத்தலின்படி, இதை குறிப்பிட்டு கோயில் வாசலில் போர்டு வைத்திருக்கிறோம்'' என்றார். இந்த தடை நீக்கப்பட வேண்டும் எனவும் சிலர் கோரி வருகின்றனர்.

Newsletter

Teen Girl Dies After Family of Three Consumes Pesticide Near Perur in Coimbatore

In a tragic incident, a family of three allegedly consumed pesticide at their residence in Arumugagoundanur near Perur,...

கோவையில் இயற்கை உபாதைக்கு சென்றவரிடம் கத்திமுனையில் வழிப்பறி: 2 பேர் கைது

கோவை புலியகுளம் அம்மன்குளம் பகுதியில் இயற்கை உபாதைக்கு சென்ற எலக்ட்ரீசியன் மிதுன்குமாரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.7 ஆயி...

Biker Run Over by Bus on Sathy Road in Coimbatore

In a horrific accident, 33-year-old Balamurugan died after falling from his bike and being run over by a bus near Prozon...

தொண்டாமுத்தூர் அரசு விடுதி உணவு வீடியோ: தவறான தகவல் என அதிகாரி தெரிவிப்பு

கோவை தொண்டாமுத்தூரில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் தங்கும் சமூக நல விடுதியில் 48 மாணவர்கள் தங்கியுள்ளனர். சப்பாத்தி முறைய...

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...