கோவையில் தொடரும் யானைகள் மரணம்- அதிர்ச்சியில் வன ஆர்வலர்கள்


கோவை மாவட்டம், சிறுமுகை பகுதியானது நீர்நிலைகள் நிறைந்த, அடர்ந்த வனப்பகுதியாகும். இங்கு, யானை, காட்டெருமை, மான், சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. 

இந்நிலையில், வியாழனன்று அப்பகுதியில் யானை குட்டி ஒன்று இறந்துகிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனைத்தொடர்ந்து அப்பகுதிக்குச் சென்ற வனத்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் இறந்துள்ள யானைக்கு சுமார் ஒரு வயது மட்டுமே இருக்கும் என்றும், யானைக் கூட்டத்திற்கு இடையே ஏற்பட்ட நெரிசலில் இறந்திருக்கலாம் என்றும் தெரிவித்தனர். இருப்பினும், பிரேதப் பரிசோதனைக்குப் பிறகே உண்மைத் தகவல் தெரியவரும் என்றனர்.



கடந்த அக்டோபர் 30ம் தேதியன்று இப்பகுதியின் அருகாமையில் கைவிடப்பட்ட ஒரு குட்டி யானை மீட்கப்பட்டு முதுமலை புலிகள் சரணாலயத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு அந்த யானை உயிரிழந்தது. இந்நிலையில், தற்போது மீண்டும் ஒரு குட்டி யானை உயிரிழந்திருப்பது வனத்துறை அதிகாரிகள் மற்றும் வன ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் ரோட்டராக்ட் கிளப் ஆஃப் கோவை நைட்ஸ் சார்பில் ARENA ஸ்போர்ட்ஸ் மீட்

கோவை வெங்கிட்டாபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி கமல்நாதன் நினைவு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், தேசிய விளையாட்டு தினத்தை மு...

கோவை வார்டுகள் 12, 13-ல் வளர்ச்சிப் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.12 மற்றும் 13க்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகள் தொட...

காணியாளம்பாளையம் MIRA HOMES பகுதியில் ஈக்கள் தொல்லை: உடனடி நடவடிக்கை கோரி மனு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா கக்கடவு ஊராட்சிக்கு உட்பட்ட காணியாளம்பாளையம் MIRA HOMES DTCP அப்ரூவல் வீட்டுமனை பகுதி...

இடையர்பாளையத்தில் காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு கூட்டம்

கோவை மாநகர் மாவட்டம் கவுண்டம்பாளையம் சர்க்கிள் கமிட்டி சார்பாக இந்திய தேசிய காங்கிரஸ் மறு சீரமைப்பு இயக்கத்தின் எஸ் எஸ்...

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...