டெல்லியில் ஏற்பட்டுள்ள மாசு பிரச்சினையை கண்காணிக்க கோரி மனு: நாளை விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்டு

டெல்லி மற்றும் அண்டை நகரங்களில் ஏற்படும் காற்று மாசுபாட்டை கண்காணிக்க கோரி தொடரப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு நாளைக்கு விசாரிப்பதாக தெரிவித்துள்ளது.

நாட்டின் தலைநகர் டெல்லியில் தீபாவளி பண்டிகைக்கு பின்னர் கடந்த ஒரு வாரமாக காற்றில் மாசு அதிகரித்து உள்ளது. விடிந்து பகல் பொழுது வந்த பின்னரும் காற்றில் மாசு காணப்படுவதால் டெல்லி நகர மக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகி இருக்கின்றனர். குறிப்பாக குழந்தைகளும், வயதானோரும் மூச்சு விட சிரமப்படுகின்றனர். கண் எரிச்சலுக்கும் ஆளாகி வருகிறார்கள். இதனால் பகல் நேரத்தில் டெல்லியில் மக்கள் நடமாட்டம் குறைவாக காணப்படுகிறது. மக்கள் சுவாச கவசம் அணிந்து நடமாடும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். காற்று மாசு அபாய கட்டத்தில் இருப்பதால், பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாடு அமைப்பின் ((Prevention and Control) Authority (EPCA) சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவில் டெல்லி மற்றும் அண்டை நகரங்களில் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதை கண்காணிக்கவும் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை முழுமையாக அமல்படுத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கோரப்பட்டு இருந்தது.  இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.எஸ் தாகூர் மற்றும் நீதிபதிகள் டி ஒய் சந்திரசவுத், எல். நாகேஷ்வர் ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு நாளை பிற்பகல் 3.30 மணியளவில் மனுவை விசாரிப்பதாக கூறியது. 

முன்னதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் டெல்லியில் காற்று மாசு அபாய கட்டத்தை எட்டுவதை அடுத்து பல்வேறு உத்தரவுகளை  சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்து இருந்தது. டீசலில் இயங்கும் எஸ் யூவி கார்களை பதிவு செய்யக்கூடாது. 2 ஆயிரம் சிசிக்கும் அதிகமாக திறன் கொண்ட கார்களை அனுமதிக்க கூடாது போன்ற பல்வேறு உத்தரவுகள் அதில் அடங்கும். இதற்கிடையே, கடந்த ஆகஸ்ட் மாதம் இந்திய கார் உற்பத்தி சங்கம் மற்றும் பிற அமைப்புகள் அளித்த பிரமாணப்பத்திரத்தை அடுத்து கூடுதலாக ஒரு சத வீத வரியுடன் 2 ஆயிரம் சிசிக்கு அதிகமான திறன் கொண்ட கார்கள் விற்பனைக்கு அனுமதி அளித்தது நினைவிருக்கலாம்

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...