தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கும், சிறந்த பள்ளிக்கும் விருது வழங்கும் விழா

கோவை: இராமநாதபுரம் அல்வேர்னியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விருது வழங்கும் விழாவும், டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது பெற்றவர்களுக்கு பாராட்டு விழாவும் நடைபெற்றது. இவ்விழாவிற்க்கு, சிறப்பு விருந்தினராக மெட்ரிக் பள்ளி இயக்குனர் கருப்புசாமி கலந்து கொண்டு விருதுகளை வழங்கி அனைவரையும் பாராட்டினார்.



கோவை மாவட்ட அனைத்து மெட்ரிக் பள்ளிகளின் ஒருங்கினைப்பான அகாடமி கவுன்சிலால் ஒவ்வொரு ஆண்டும் விருது வழங்கும் விழா நடத்தப்படுகிறது. அதன்படி, இவ்வாண்டு 12ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு பொது தேர்வில் மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவியருக்கும், 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற  பள்ளிகளையும், முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்களை பாராட்டி கெரவிக்கப்படுகிறது. 



இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருள்முருகன், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் வனஜா, கோவை மாவட்ட கல்வி அலுவலர் தேன்மொழி, பொள்ளாச்சி மாவட்ட கல்வி அலுவலர் நஸ்ருதீன், அகாடமி கவுன்சில் ஒருங்கிணைப்பாளர் மரியா ஜோசப், பொருளாளர் ஆண்டனி, செயலாளர் ஹாஜா செரீப், அல்வேர்னியா பள்ளி முதல்வர் செலீன், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...