மாடியில் இருந்து தவறி விழுந்து பத்திரிகையாளர் மரணம் சக பத்திரிகையாளர்கள் கருப்பு பேட்ச் அணிந்து துக்கம் அனுசரிப்பு

கோவை பேரூர் பகுதியை சேர்ந்தவர் யாழ்முடி நாதன் என்கிற கவுதம் (27). இவர் லோட்டஸ் மற்றும் மூண் தொலைக்காட்சிகளில் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். கடந்த வாரம் தனது சகோதரியின் திருமண நிகழ்ச்சிக்காக கொடைக்கானலுக்கு சென்றார். திருமணம் முடிந்து சகோதரி வீட்டில் தங்கியிருந்தார். நேற்று இரவு, எதிர்பாராத விதமாக வீட்டின் மாடியில் இருந்து தவறி விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 



இது குறித்த தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கவுதம்-ன் உடலை கைப்பற்றி கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். 

தற்போது கவுதம்-ன் உடல், அவரது சொந்த ஊரான கோவைக்கு கொண்டுவர உள்ளது.  இது குறித்து தகவலறிந்த கோவை மாவட்ட பத்திரிக்கையாளர்கள் இன்று காலை, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மவுன அஞ்சலி செலுத்தினர். மேலும், கருப்பு பேட்ச் அணிந்து துக்கம் அனுசரித்துள்ளனர். 



உடன் பணியாற்றிய  பத்திரிக்கையாளர் ஒருவர் உயிரிழந்த சம்பவம், சக பத்திரிக்கையாளர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...