56 வருட கலை சேவையை பாராட்டி ஜாக்கிசானுக்கு கவுரவ ஆஸ்கர்

 பிரபல நடிகர் ஜாக்கி சானுக்கு அமெரிக்காவில் நடந்த விழாவில் கவரவ ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது. ஹாங்காங்கைச் சேர்ந்தவர் நடிகர் ஜாக்கி சான். தனது அதிரடி சண்டைக் காட்சிகள் மற்றும் காமெடி முலம் உலகமெங்கும் உள்ள ரசிகர்களை  வசியப்படுத்தியவர். நடிகர், இயக்குனர், சண்டைக் கலைஞர், தயாரிப்பாளர் என பன்முகத் தன்மை கொண்ட ஜாக்கி சானுக்கு தற்போது 62  வயது. தனது ஐந்து வயதில் இருந்தே நடிக்கத் தொடங்கிய அவர், இப்போது 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

உலகம் முழுவதும் இருந்தும் பல்வேறு சினிமா விருதுகளை பெற்றுள்ள அவருக்கு உலகின் உயரிய சினிமா விருதான ஆஸ்கர் விருது  இதுவரை கிடைத்ததில்லை. 56 வருடமாக சினிமா துறையில் இருக்கும் ஜாக்கிசானுக்கு  கவுரவ விருது வழங்க, ஆஸ்கர் கமிட்டி முடிவு  செய்தது. அதன்படி, 8வது கவுரவ ஆஸ்கர் விருது வழங்கும் வண்ணமிகு விழா, அமெரிக்காவின் ஹாலிவுட்டில் நேற்று முன்தினம் இரவு  நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் ஜாக்கி சான், எடிட்டர் ஆன் வி கோட்ஸ், காஸ்டிங் டைரக்டர் லின் ஸ்டால் மாஸ்டர் மற்றும்  ஆவணப்பட இயக்குனர் பிரெடரிக் வைஸ்மேன் ஆகியோருக்கு அவர்களின் கலை சேவையை பாராட்டி கவுரவ ஆஸ்கர் விருது  வழங்கப்பட்டது.

விருதை பெற்ற பின்  ஜாக்கிசான் பேசியதாவது: 23 வருடங்களுக்கு முன் சில்வஸ்டர் ஸ்டாலோனை அவரது வீட்டில் சந்தித்தேன். அப்போது  ஆஸ்கர் விருதை அங்கு பார்த்ததில் இருந்து அதை வாங்க வேண்டும் என்று ஆசை ஏற்பட்டது. கடைசியாக இப்போது ஆஸ்கர் அகாடமியின்  தலைவர் ஐசாக் அழைத்து விஷயத்தைச் சொன்னார். என்னால் நம்பவே முடியவில்லை. எனது 56 வருட சினிமா வாழ்வில், 200 படங்களுக்கு  மேல் நடித்துவிட்டேன். படங்களுக்காக எனது எலும்புகள் பலவற்றை உடைத்து, கடைசியாக இந்த விருதை பெற்று விட்டேன்.  ஹாலிவுட்டுக்கு நன்றி. பல விஷயங்களை அது எனக்கு கற்றுத் தந்திருக்கிறது. அதோடு என்னை கொஞ்சம் பிரபலமாகவும் உருவாக்கி  இருக்கிறது. இங்கு இப்போது கவுரவிக்கப் பட்டிருக்கிறேன். இவ்வாறு ஜாக்கி சான் கூறினார்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...