அமெரிக்க தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றிபெற்றது தெரியாத வடகொரியா மக்கள்

உலக நாடுகள் மற்றும் ஐ.நா சபையின் வெறுப்பையும் அதிருப்தியையும் பெற்று வரும் வட கொரியா அரசு அங்கு ஒரு தனி உலகத்தையே நடத்தி வருகிறது.

வட கொரியா நாட்டில் தனியார் தொலைக்காட்சிகள் செயல்பட அனுமதி கிடையாது. இதனால், அரசு அதிகாரப்பூர்வமாக ஒளிப்பரப்பும் தகவல் மட்டுமே குடிமக்களுக்கு சென்றடையும்.

சில முக்கிய அதிகாரிகள் தவிர நாடு முழுவதும் இணையத்தளம் பயன்படுத்த குடிமக்களுக்கு தடை உள்ளதால் அவர்களால் இணையத்தளம் வழியாகவும் இச்செய்தியை அறிந்துக்கொள்ள முடியாது.

மேலும், வட கொரியா நாட்டிற்கு சுற்றுலா செல்லும் வெளிநாட்டினர்கள் கைப்பேசி வைத்துக்கொள்ள அனுமதி இல்லாததால் அவர்கள் மூலமும் குடிமக்கள் செய்தியை தெரிந்துக்கொள்ள வாய்ப்பில்லை.

அமெரிக்க தேர்தல் முடிவுகள் வெளியாகி  45-வது அதிபராக அரசியல் பின்னணி இல்லாத டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றது உலக நாடுகள் அனைத்திலும் முக்கிய செய்தியாக வெளியானது.

ஆனால் வட கொரியா குடிமக்களுக்கு டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றது இதுவரை அந்நாட்டு அரசு தெரியப்படுத்தாமால் ரகசியமாக வைத்து வருகிறது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுபோன்ற ஒரு சூழலில் இதுநாள் வரை வட கொரியா குடிமக்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி யார் என்ற தகவல் தெரியப்படுத்தவில்லை என்பது பெரும் வேதனையான செய்தியாகும்.

வட கொரியாவில் உள்ள பி.பி.சி செய்தியாளர் ஒருவர் வெளியிட்டுள்ள தகவலில், ‘அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி பற்றி இங்குள்ள ஒருவருக்கும் எதுவும் தெரியாது.

கடந்த 2008-ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதியாக ஒபாமா தெரிவு செய்யப்பட்டு 3 நாட்களுக்கு பிறகு தான் தனது குடிமக்களுக்கு வட கொரியா அரசு அதிகாரப்பூர்வமாக தெரியப்படுத்தியது’ என அந்த செய்தியாளர் தெரிவித்துள்ளார். 

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...