'எக்சிட் தேர்வு' வேண்டாம் என்று கூறி அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்


மருத்துவ படிப்பு முடித்த மாணவர்களுக்கு எக்சிட் தேர்வு வைக்க இருப்பதாக மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த தேர்வு முறையை எதிர்த்து கோவை அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் இன்று அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இது குறித்து அக்கல்லூரியின் மாணவர் பிரதிநிதியான விட்மன் அறிவுமதி கூறியதாவது :- 

மத்திய மற்றும் மாநில அரசுகளின் அங்கீகரிக்கப்பட்ட தேர்வுகளை எழுதியே நாங்கள் இந்த படிப்பை படித்து வருகிறோம். ஆனால் தற்போது எக்சிட் தேர்வு முறை வைக்க இருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது. இந்த முறை அமலுக்கு வந்தால் இந்தியாவில் மருத்துவர்கள் எண்ணிக்கை குறையும். வெளிநாடுகளிலும், தனியார் மருத்துவ கல்லூரி மாணவர்களிடையேயும் நடத்தப்பட வேண்டிய இந்த தேர்வை, அரசு மருத்துவ கல்லூரி மாணவர்களிடையே நடத்துவது ஏற்புடையதல்ல. உடனடியாக இதை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் கலந்து கொண்டனர். 



          

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...