சாலை விபத்து குறித்து விழிப்புணர்வு நாடகம்


கோவை: புரூக் பீல்ட்ஸ் வணிக வளாகத்தில் இன்று மாலை பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து ரூட்ஸ் நிறுவனம் மற்றும் கோவை மாநகர போக்குவரத்து சார்பில் விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது. கோவை மாநகர துணை ஆணையர் சரவணன் தலைமை தாங்கினார்.



இந்நாடகம், ரூட்ஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் இணைந்து பயணத்தில் விபத்துக்கள் எவ்வாறு நடைபெறுகிறது என்பதை நாடகத்தின் மூலம் பொதுமக்களுக்கு விளக்கினர். அதில், பயணம் செய்யும் போது, மது அருந்தி விட்டு பயணம் செய்வது, தலைக்கவசம் அணியாமல் பயணம் செய்வது, கைபேசி பேசிக்கொண்டு பயணம் செய்வது, சீட் பெல்ட் அணியாமல் பயணம் செய்வது போன்ற பல்வேறு விதமான செயல்களால் சாலை விபத்து ஏற்படுகிறது. என்பதை நாடகத்தின் மூலம் விளக்கினர்.







பின்னர், இது குறித்து கோவை மாநகர துணை ஆணையர் சரவணன் பேசுகையில், இந்நாடகத்தின் மூலம் பொதுமக்கள் சாலை பயணத்தின் போது தங்களது தவறை சரிசெய்து கொள்ளவேண்டும் என்றும் சாலை விதிகளை பின்பற்றியும் விலைமதிப்பில்லா இந்த உயிரை காப்போம் என்றும் கூறினார்.



இதில், ரூட்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் கவிஞர் கவிதசன், கோவை மாநகர உதவி ஆணையர் மாகுடபதி, போக்குவரத்து மேற்கு காவல் ஆய்வாளர் சதாசிவம், கிழக்கு காவல் ஆய்வாளர் ஐயர்சாமி, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சரவணன் மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...