இந்திய உடல் உறுப்பு தானம் தினத்தை முன்னிட்டு கோவையில் விழிப்புணர்வு பேரணி


கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளியன்று (இன்று) இந்திய உடல் உறுப்பு தானம் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தொடங்கி வைத்து பேரணியில் கலந்து கொண்டார். 



சுமார் 600 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட இப்பேரணி, உடல் உறுப்பு தானம் செய்வது குறித்த விழிப்புணர்வு பதாதைகளை ஏந்தி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நகரின் முக்கிய வீதி வழியாக சென்று கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நிறைவடைந்தது.



இதைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் பேசுகையில்:

"இந்திய உடல் உறுப்பு தான நாள்" இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் முக்கியத்துவத்தை பொது மக்கள் அறிந்து பயன்பெறும் வகையில் இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொருவரும் உடல் உறுப்பு தானத்தின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ள வேண்டும். உடல் உறுப்புகள் தானம் செய்வதன் முலம் ஒருவருக்கு உயிர் கொடுக்க உதவுகிறோம் .

இதை இன்றைய இளைய சமுதாயம் முதல் பொது மக்கள் அனைவரிடத்திலும் விழிப்புணர்வை ஏற்படுத்தி பயன்பெற வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்'' என தெரிவித்தார்.



இப்பேரணியில், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் எட்வின்ஜோ, முதலைமைச்சரின் விரிவான காப்பீட்டுத்திட்ட ஒருங்கிணைப்பளர்கள் சீனிவாசன், மோகன் மற்றும் மருத்துவர்கள், அரசு அலுவலர் உட்பட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...