போக்குவரத்து விதி மீறல்கள் வழக்கு எண்ணிக்கை குறைப்பு : துணை ஆணையர் சரவணன் தகவல்.


5௦௦ மற்றும் 1௦௦௦ ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பை தொடர்ந்து போக்குவரத்து விதிமீறல்கள் வழக்கு எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக கோவை மாநகர துணை ஆணையர் (போக்குவரத்து) சரவணன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் நமக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் கூறியதாவது :-

கோவை மாநகரில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. அதன்படி,  நாள் ஒன்றிற்கு 650 முதல் 7௦௦ வழக்குகள் பதியப்பட்டு அபராதம் வசூலிக்கப்பட்டு வந்தது.

5௦௦ மற்றும் 1௦௦௦ ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை கடந்த 8ம் தேதி மத்திய அரசு வெளியிட்டது. அன்று முதல் மக்களிடம் சில்லறைத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

விதிகளை மீறி வாகனம் ஓட்டுபவர்களிடம் அபராதம் வசூலிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், அத்தகைய வாகன ஓட்டிகள் மீது வழக்குப் பதிவது குறைக்கப்பட்டுள்ளது. தற்போது நாள் ஒன்றிற்கு  40 முதல் 50 வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்படுகின்றன. மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டுபவர்கள் மீதே இந்த வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

 கருப்பு பணத்தை ஒழிக்கும் வகையில் 5௦௦ மற்றும் 1௦௦௦ ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. இதனால் நாடு முழுவதும் சில்லறைத் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

Newsletter

காணியாளம்பாளையம் MIRA HOMES பகுதியில் ஈக்கள் தொல்லை: உடனடி நடவடிக்கை கோரி மனு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா கக்கடவு ஊராட்சிக்கு உட்பட்ட காணியாளம்பாளையம் MIRA HOMES DTCP அப்ரூவல் வீட்டுமனை பகுதி...

இடையர்பாளையத்தில் காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு கூட்டம்

கோவை மாநகர் மாவட்டம் கவுண்டம்பாளையம் சர்க்கிள் கமிட்டி சார்பாக இந்திய தேசிய காங்கிரஸ் மறு சீரமைப்பு இயக்கத்தின் எஸ் எஸ்...

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...