வீடியோ கேம் பிரியர்களை கவர்ந்த ''மகாயுத்''

கே.ஜி.ஐ.எஸ்.எல் கல்லூரி வளாகத்தில் கோவை மாவட்டத்தில் உள்ள வீடியோ கேம் விளையாட்டுப் பிரியர்களை கவரும் வகையிலும், அவர்களது மத்தியில் விளையாட்டினை ஊக்கப்படுத்தும் வகையிலும் கேம்மிங் பிரீமியர் லீக் ''மகாயுத்'' என்ற விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த விளையாட்டுப் போட்டிக்கு டெக் ப்ரேக்த்ரோ முதன்மை நிரைவேற்று அதிகாரி விஷால் வெங்கடேசன் ஏற்பாடு செய்திருந்தார். 



இதுகுறித்து, விஷால் வெங்கடேசன் நமது நிருபரிடம் கூறியதாவது:-

வார விடுமுறையினை மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் இந்த விளையாட்டுப் போட்டி துவங்கப்பட்டுள்ளது. கோவையில் பல்வேறு விளையாட்டு ஆர்வலர்கள் உள்ளனர். அவர்களை ஊக்கப்படுத்துவதே எங்களது நோக்கம். 

''மகாயுத்'' விளையாட்டில் மொத்தம் 40 குழுக்கள் உள்ளன. ஒவ்வொரு குழுவிலும் 4 பேர் இடம் பெற்றுள்ளனர். இவர்களுக்கிடையே போர் போன்ற போட்டிகள் பெரிய திரையில் நடைபெறும். கவுண்டர் ஸ்ட்ரைக் குலோபல் (Counter Strike Global Offence) என்ற இந்த விளையாட்டு பெரும்பாலும் ஐடி நிறுவனத்தினரையே ஈர்த்துள்ளது. 



இந்த விளையாட்டில் நீக்கமும் உள்ளது. போட்டியின் முடிவில் குறைந்த இலக்கை அடைந்தவர்கள் நீக்கப்படுவர். வெற்றி பெற்றவர்கள் அடுத்த சுற்றுக்கு தகுதி அடைவர். இதன் இறுதிச் சுற்று நாளை (செவ்வாய்) நடைபெற உள்ளது. இதில் வெற்றியடைவோருக்கு 75 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுதவிர, மகாயுத் விளையாட்டு அமைக்கப்பட்டுள்ள வளாகத்தில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிறுவனங்களின் ஸ்டாலும் அமைக்கப்பட்டுள்ளது. இது, அந்த நிறுவனங்களுக்கு பயனுள்ள விளம்பரமாகவும் உள்ளது. அதில், 3டி-யில் வரைதல், ஆட்டோமேஷன் சென்சார் செயலி உள்ளிட்டவைகளும் அமைக்கப்பட்டுள்ளது.



இந்த விளையாட்டு நிகழ்ச்சி சிறப்பான முறையில் உள்ளது. பல்வேறு மன சோர்வுகளில் இருந்து மக்கள் மீண்டுவர இது பயனுள்ளதாக அமைந்தது என விஷால் வெங்கடேசன் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...