சர்வதேச தொழில் முனைவோர்களுக்கான கூட்டமைப்பு (TiE) சார்பில் விழிப்புணர்வு மினி மாராத்தான்


சர்வதேச தொழில் முனைவோர்களுக்கான கூட்டமைப்பு (TiE) சார்பில் வரும் டிசம்பர் 16 மற்றும் 17ம் தேதிகளில் தில்லியில் சர்வதேச சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட TiE அமைப்பு சார்பில் ''ஸ்டார்ட் ஆப் ஸ்ட்ரைடு'' என்ற மினி மாராத்தான் போட்டி நடைபெற்றது. இந்த மாராத்தான் போட்டி தற்போதைய மில்லியன் தொழில்முனைவோர் (A Million entrepreneurs NOW) என்ற கருவில் கோவை வஊசி மைதானம் அருகே நடைபெற்றது.



இதில், 3 முதல் 5 கிலோ மீட்டர் மாராத்தான் பந்தைய விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியினை கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் துவக்கி வைத்தார். கோவையில் நடைபெற்றதைப் போலவே சண்டிகர், சென்னை, தில்லி, ஹீப்லி, ஹைதராபாத், கேரளா, நாக்பூர், ராஜஸ்தான் மற்றும் தம்பா பே ஆகிய பகுதிகளிலும் நடைபெற்றது.



இதுகுறித்து TiE கோவை மாவட்டத் தலைவர் ஜி.கார்த்திகேயன் கூறியதாவது:-

இந்த மாராத்தான் மூலம் நாங்கள் புதிய தொழில் முனைவோர் மற்றும் சிறு நிறுவனங்களை ஊக்குவித்து அவர்களை சர்வதேச தரத்தில் உயர்த்த திட்டமிட்டுள்ளோம். இந்த மினி மாராத்தான் மூலம் புதிய நிறுவனங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முனைந்துள்ளோம். கோவை தொழில்முனைவோர்களுக்கான சிறந்த மாவட்டமாக உள்ளது. இந்நிகழ்வானது அதற்கு மேலும் வழுசேர்க்கும் வகையில் இருக்கும்'' என்றார்.



இந்நிகழ்வின் தலைவர் மற்றும் பார்க் கல்விக் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அனுஷா ரவி கூறியதாவது:-

புதிய தொழில் துவங்குவது எழிதான காரியம் அல்ல. அது மாராத்தான் பந்தையத்தைப் போன்று கடுமையான செயல். ''ஸ்டார்ட் ஆப் ஸ்ட்ரைடு'' மூலமாக நாங்கள் தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கிறோம். இந்த சர்வதேச உச்சி மாநாடு 10 லட்சம் தொழில் முனைவோர்களின் கனவைப் போன்றது. இந்த தருனத்தில் நான் இளைய தொழில் முனவோர்களையும், அதில் ஆர்வம் கொண்டுள்ளோர்களையும் எங்களுடன் இணைய அழைப்புவிடுக்கிறேன்'' என்றார்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...